top of page
learn_tc_header_1x.png

Terms & Conditions

Digi Gold Terms & Conditions

பயன்பாட்டு விதிமுறைகள்

பகுதி – I

1.  அறிமுகம்

1.1இந்த ஆவணம் தகவல் தொழில்நுட்பச்சட்டம், 2000 இன் விதிமுறைகள், மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இல் இணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் பதிவுகளுக்கு பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு மின்னணு பதிவு. இந்த மின்னணு பதிவு ஒரு கணினியால் உருவாக்கப்பட்டது, இதற்கு கையொப்பமோ அல்லது டிஜிட்டல் கையொப்பமோ தேவையில்லை.

1.2இந்த ஆவணம் தகவல் தொழில்நுட்ப விதிகளின், 2011 விதி 3(1) இன் படி (இடைநிலை வழிகாட்டுதல்கள்) வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி இந்த தளத்தை உபயோகிப்பதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள், கோட்பாடுகள் மற்றும் விதிகள் வெளியிடப்படவேண்டும்.

1.3இந்த விதிமுறைகளின் பகுதி I மற்றும் பகுதி II இரண்டும் மொத்தமாக ‘விதிமுறைகள்’ என்றழைக்கப்படும் மேலும் எப்பொழுதும் ஒன்றாக படிக்கப்பட வேண்டும்.

2. வரையறைகள்

2.1.இந்த விதிமுறைகளின் படி, தேவைப்படும் இடத்தில், கீழ்க்கண்ட சொற்கள் குறிப்பது:

2.1.1“வாடிக்கையாளர்” என்பது இந்த விதிமுறைகளிலுக்கு உட்பட்டு இந்த தளத்தின் மூலம் தங்கம் வாங்குபவர், தங்கத்தைப் பெற்றுக்கொள்பவர் மற்றும்/அல்லது டிஜிகோல்டிற்கு மீண்டும் தங்கத்தை விற்கும் எந்த ஒரு தனிநபரையும் குறிக்கும்.

2.1.2“வாடிக்கையாளர் கணக்கு” என்பது இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்களோ அல்லது வேறு ஒருவரோ துவங்கும் கணக்கு ஆகும்.

2.1.3“வாடிக்கையாளர் கணக்கு விபரம்” என்பது வாடிக்கையாளர் கணக்கு துவங்க நீங்கள் வழங்கிய விபரங்களைக் குறிக்கும்.

3.1.4“வாடிக்கையாளர் கோரிக்கை” என்பது வாடிக்கையாளர் தங்கம் குறித்து நீங்கள் எழுப்பிய பெற்றுக்கொள்ளும் கோரிக்கை, விற்பனை கோரிக்கை அல்லது மாற்றும் கோரிக்கையைக் குறிக்கும்.

3.1.5“போர்ஸ் மசூர் நிலை” என்பது விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டின் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். நாசவேலை, நெருப்பு, வெள்ளம், குண்டுவெடிப்பு, கடவுளின் சித்தம், உள்நாட்டுக் குழப்பம், வேலைநிறுத்தம், கதவடைப்பு அல்லது தொழிற்சாலை சார்ந்த ஏதாவது செயல், கலவரம், கிளர்ச்சி, போர், அரசின் நடவடிக்கை, கணினி ஊடுருவுதல், உள்நாட்டு இடையூறுகள், கணினி தகவல் மற்றும் சேமிப்புத் தகவலில் அங்கீகரிக்கப்படாத உபயோகம், கணினி கோளாறு, வைரஸ் தொற்று, பாதுகாப்பு மீறல் மற்றும் இது போல் விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டின் கட்டுப்பாட்டை மீறி விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு கடந்துவர முடியாத நிகழ்வுகளைக் குறிக்கும்.

3.1.6“நபர்” என்பது ஒரு தனி நபர், ஒரு பெருநிறுவனம், ஒரு கூட்டு, ஒரு கூட்டு முயற்சி, ஒரு அறக்கட்டளை, ஒரு ஒருங்கிணைக்கப்படாத அமைப்பு மற்றும் இதர சட்டத்திற்கு உட்பட்ட அமைப்பைக் குறிக்கிறது.

3.1.7“தளம்” என்பது பரிவர்த்தனைகள், தளம் வழங்கும் அனைத்து சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உபயோகிக்க வாடிக்கையாளர் பயன்படுத்தும் 'ட்ருபேலன்ஸ்' என்ற பெயரில் இயங்கும் மொபைல் செயலி மற்றும் வலைத்தளத்தைக் குறிக்கும்.

3.1.8“மாற்றம்” என்பது ஒரு வாடிக்கையாளர் கணக்கில் இருந்து மற்றொரு வாடிக்கையாளர் கணக்கிற்கு தங்கத்தை மாற்றும் அம்சத்தைக் குறிக்கிறது.

பகுதி 2.1 இல் வரையறுக்கப்பட்ட இந்த சொற்கள் அல்லாது இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படும் இதர சொற்களின் பொருள் அந்தந்த பகுதியில் விளக்கப்பட்டிருக்கும்.

3.  டிஜிகோல்ட் வழங்கும் சேவைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

3.1.டிஜிட்டல் கோல்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் பதிவு செய்த நிறுவனம், 1902 டவர் பி, பெனின்சுலா பிசினஸ் பார்க், கன்பட்ரோ கடம் மார்க், லோயர் பரோல், மும்பை, மகாராஷ்டிரா 400013 என்னும் முகவரியில் இயங்கி வரும் நிறுவனம், (“டிஜிகோல்டு”) தளத்தில் அல்லது தளம் மூலம் தங்கம் விற்கும், பாதுகாப்பு/பெட்டகம் வழங்கும் மற்றும் தங்கம் வழங்குதல் மற்றும் இதர சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் (“சேவைகள்”).

3.2.டிஜிகோல்டு பெயரில் விற்பனைக்கு வழங்கப்படும் தங்கம் “சேப்கோல்ட்” என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. சேவைகளை வழங்குவது டிஜிகோல்டு. பேலன்ஸ் ஹீரோ இந்தியா பிரைவேட் லிமிடெட் (“விநியோகஸ்தர்”) தன் தளத்தில் இதன் சேவைகளை வெளியிடும்செயலை மட்டும் தான் செய்கிறது. கட்டணசேவை மற்றும் சேவைகள் குறித்து வாடிக்கையாளர் எழுப்பும் கேள்விகளுக்கு உதவி புரிவது தவிர வேறு எதற்கும் விநியோகஸ்தர் பொறுப்பல்ல.சேவைகள் குறித்த அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிகோல்டு அதன் இடைத்தரகர்கள் (பாதுகாப்பு அறங்காவலர் மற்றும் பாதுகாவலர்) உதவியுடன் வழங்குகிறது. அவர்களுடன் டிஜிகோல்டு தனி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

3.3.சேவைகளை உபயோகிக்கும் முன்பு இந்த விதிமுறைகளைப் படித்து புரிந்துகொள்ளுமாறு வாடிக்கையாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

3.4.தளத்தின் வழியாக செய்யப்பட்ட எந்த பரிவர்த்தனைக்கும், எந்த நபருக்கும், நேரடியாகவோ மறைமுகமாகவோ டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகஸ்தர்கள் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்த பரிவர்த்தனை செய்வதற்கு முன்பும் தேவையான சரியான ஆய்வு செய்வதற்கு வாடிக்கையாளரே (இதுமுதல் “நீ” என்றழைக்கப்படும், தேவைப்படும் இடத்தில் “நீங்கள்” எனவும்) முழு பொறுப்பு. மேலும் இந்த தளம் மூலம் நீங்கள் வாங்கும் அல்லது முடிவெடுக்கும் எதற்கும் டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகஸ்தர் மற்றும் அதன் அலுவலர்கள், இயக்குனர்கள், ஊழியர்கள், முகவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் யாருக்கும் எந்த பொறுப்பும் இல்லையென நீங்கள் உணர்ந்து ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.

3.5.வாடிக்கையாளர் கணக்கு துவங்கப்பட்ட நாள் முதல் டிஜிகோல்டின் சேவைகள் குறிப்பிட்ட காலம் வரை வழங்கப்படும்.

3.6.சேவைகள் “இருப்பது போல” மற்றும் “கிடைப்பது போல” வழங்கப்படும் என்பதை நீங்கள் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள். தளத்தில் ஏற்படும் குறைபாடு அல்லது பிரச்சனை மூலம் உங்கள் கருவி மற்றும்/அல்லது நீங்கள் உபயோகிக்கும் கருவி மற்றும் மேற்கண்ட கருவிகளுடன் இணைப்பில் உள்ள புற கருவிகளான சர்வர் மற்றும் கணினியில் உள்ள தகவல்களில் இழப்பு ஏற்படலாம். நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் மூலம் ஏற்படும் தகவல், கருவி அல்லது மென்பொருள் இழப்பிற்கான பொறுப்பையும் செலவையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4.  பாதுகாப்பு அறங்காவலர், இடைத்தரகர்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்

4.1.இடைத்தரகர்கள் நியமனம்

4.1.1.டிஜிகோல்டு அல்லது பாதுகாப்பு அறங்காவலர்(யாராக இருப்பினும்) அவ்வப்போது உங்களுக்கு சேவை வழங்க டிஜிகோல்டிற்கு உதவ இடைத்தரகர்களை நியமிக்கலாம் (“இடைத்தரகர்கள்”). பாதுகாப்பு அறங்காவலர், பெட்டக பாதுகாப்பாளர் மற்றும் டிஜிகோல்டு அல்லது பாதுகாப்பு அறங்காவலர் நியமிக்கும் யாரையும் “இடைத்தரகர்கள்” என்னும் சொல் குறிக்கும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்கள் கோரிக்கை விடுக்கும் வாடிக்கையாளர் ஆர்டர் (வெற்றிகரமாக கட்டணம் செலுத்திய பிறகு) ஆரம்பிக்கும் நாள் முதல் கோரிக்கை நிறைவேறும் நாள் வரை இது பொருந்தும். உங்கள் சார்பில் அம்மாதிரி இடைத்தரகர்களை நியமிக்க டிஜிகோல்டு அல்லது பாதுகாப்பு அறங்காவலர்களுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

4.1.2.உங்களது வாடிக்கையாளர் ஆர்டர்/வாடிக்கையாளர் கோரிக்கை அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்க்க இடைத்தரகர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் இந்த இடைத்தரகர்களின் நியமனத்திற்கு சேவைகளுக்கும் சில கட்டணம் கட்ட வேண்டியிருக்கும், அதைத் தனியாக குறிப்பிட்டால் அன்றி டிஜிகோல்டு ஏற்றுக்கொள்ளும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

4.2.பாதுகாப்பு அறங்காவலர்கள் நியமனம்

4.2.1.அனைத்து நிலைமைகளிலும் உங்கள் வாடிக்கையாளர் ஆர்டர்/வாடிக்கையாளர் கோரிக்கை நிறைவேற்றுவதற்காக, வாடிக்கையாளர் தங்கத்தின் மீது ஐடிபிஐ அறங்காவலர் சேவைகள் நிறுவனம் அல்லது வாரிசின் பெயரில் அடமானம் மூலம் ஒரு முதல் மற்றும் தனித்துவமான கட்டணம் உருவாக்கப்படும்(“பாதுகாப்பு அறங்காவலர்”).

4.2.2.இந்த விதிமுறைகளை ஒப்புக்கொள்வதன் மூலம் பாதுகாப்பு அறங்காவலருடன் இருக்கும் விதிமுறைகளை (பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தம்) மற்றும் வாடிக்கையாளர் தங்கத்தின் மீது அடமான ஒப்பந்தம் மூலம் கட்டணம் உருவாக்கவும்(மொத்தமாக, “பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தம்”) நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். “ஒப்புக்கொள்கிறேன்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தத்தில் நீங்கள் தான் முதலாம் தரப்பு என்பதைப்போன்று; பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டவாறு நீங்களும் இணைகிறீர்கள்(அந்த தேதியில் இருந்து).

4.2.3.உங்கள் வாடிக்கையாளர் ஆர்டர்/வாடிக்கையாளர் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எந்த காரணத்தை முன்னிட்டும் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்தால், எந்த காரணத்திற்காகவும் இந்த கட்டணங்களை டிஜிகோல்டு கட்ட முடியாமல் இருந்து, அதனால் உங்கள் வாடிக்கையாளர் ஆர்டர்/வாடிக்கையாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் இருந்தால், வாடிக்கையாளரின் தங்கத்தின் ஒரு பகுதியை விற்று நிலுவையுள்ள அந்தத் தொகையைக் கட்டுவதற்கு இந்த விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தம் மூலம் இடம் உண்டு. இந்த கட்டணங்கள் கட்டியப்பிறகு உங்களுக்கு வரவேண்டிய தொகை மற்றும்/அல்லது தங்கத்தை இந்த விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தம் மூலம் கணக்கிடப்படும்.

4.2.4.இந்த் விதிமுறைகள் மூலம், உங்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உங்கள் சார்பில் நடக்க பாதுகாப்பு அறங்காவலருக்கு அங்கீகாரம் வழங்குகிறீர்கள்.

4.3.பாதுகாப்புப் பெட்டகம்/தங்கச் சேமிப்பு

4.3.1.வாடிக்கையாளர் ஆர்டருடன் தொடர்புடைய நீங்கள் வாங்கிய தங்கம் உங்கள் சார்பில் ஒரு பெட்டகத்தில் பாதுகாவலருடன் சேமிக்கப்படும் (“பெட்டகப் பாதுகாப்பாளர்”).

4.3.2.நீங்கள் இதன் மூலம் இவை இரண்டிற்கும் அங்கீகாரம் வழங்குகிறீர்கள் (i) வாங்கிய தங்கத்தைப் பாதுகாப்பாக வைக்க பெட்டக பாதுகாவலரை நியமிக்க; மற்றும் (ii) உங்கள் சார்பில் நீங்கள் வாங்கிய தங்கக்கட்டி, தங்க நாணயம் மற்றும் தங்க நகை உட்பட எந்த தங்கத்தையும் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க டிஜிகோல்டிற்கு அங்கீகாரம் வழங்குகிறீர்கள் (“வாடிக்கையாளர் தங்கம்”). விதிமுறைகளுக்கு உட்பட்டு, உங்கள் சார்பில் தங்கத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் சேமிக்கப்பட்டது என டிஜிகோல்டு இறுதி ரசீது வாங்கியவுடன் வாடிக்கையாளர் ஆர்டருடன் தொடர்புடைய உங்கள் தங்க கொள்முதல் முற்றுப்பெற்றதாகக் கருதப்படும்.

4.3.3.பெட்டகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தங்கம் போதுமான பாதுகாப்பில் இருப்பதை உறுதி செய்ய பெட்டக பாதுகாப்பாளர் தேவையான காப்பீட்டை பெற்றுக்கொள்வார், காப்பீட்டு கட்டணம் பெட்டக பாதுகாப்பாளரைச் சார்ந்தது. பெட்டகத்தில் இருந்த தங்கம் தொலைந்தாலோ சேதமடைந்தாலோ, அந்த காப்பீட்டின் பெயரில் நடவடிக்கை எடுக்க உங்கள் சார்பில் பாதுகாப்பு அறங்காவலருக்கு உரிமை வழங்குகிறீர்கள்.

4.3.4.பெட்டக பாதுகாவலர் காப்பீடு எடுத்திருந்தாலும், அந்த காப்பீட்டில் குறிப்பிடப்படாத நிகழ்வு ஏதாவது நடந்தால், வாடிக்கையாளர் தங்கத்திற்கு ஆபத்து ஏற்படும். பெட்டக பாதுகாவலர் எடுத்துள்ள காப்பீடு சர்வதேச தொழிற்சாலை வழிமுறைகளைச் சார்ந்தது, அவை கீழ்கண்ட நிகழ்வுகளை உள்ளடக்குகிறது நெருப்பு, மின்னல், திருட்டு, புயல், பூகம்பம், வெள்ளம், ஆனால் பின்வரும் நிகழ்வுகள் இதில் உள்ளடங்கவில்லை - போர், கிளர்ச்சி, போர் ஆயுதங்கள், அணு கதிர்வீச்சு, போன்றவை.

5. தங்கச் சேமிப்பு

தளத்தில் அவ்வப்போது டிஜிகோல்டு குறிப்பிடும் அதிகபட்ச காலத்திற்குள் உங்கள் வாடிக்கையாளர் தங்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் (“அதிகபட்ச சேமிப்பு காலம்”). உங்களுக்குத் தங்கத்தை வழங்கும் பொருட்டு, இந்தக் காரணத்திற்காக விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு தளத்தில் அவ்வப்போது குறிப்பிடும் சரியான முகவரி மற்றும்/அல்லது மற்ற ஆவணங்கள்/தகவல்கள்/ உடற்கூறு அடையாளங்களை நீங்கள் வழங்கவேண்டும். அதிகபட்ச சேமிப்பு காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த முகவரியை நீங்கள் வழங்கலாம். அதிகபட்ச சேமிப்பு காலத்தில் நீங்கள் முகவரி வழங்கவில்லை என்றால், அதிகபட்ச சேமிப்பு காலம் முடிந்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் (அந்த காலம் “கருணை காலம்” என்று குறிப்பிடப்படும்) நீங்கள் கொடுத்த தொடர்பு கொள்ளும் தகவலில் விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு உங்களைத் தொடர்பு கொண்டு (i) வாடிக்கையாளர் தங்கத்தைத் தரவேண்டிய முகவரி அல்லது (ii) வாடிக்கையாளர் தங்கத்தை விற்று வந்துள்ள பணத்தைப் போடா வேண்டிய வங்கி கணக்கு விபரங்கள் பெற ஒருமுறையேனும் முயற்சி நடக்கும். நீங்கள் கொடுத்த தொடர்பு விபரங்களில் கருணை காலத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ள விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டால் முடியவில்லை என்றாலோ அல்லது கருணை காலத்திற்குள் நீங்கள்:

(a)எந்த காரணத்திற்காகவும் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை(தங்கத்தைச் சேர்ப்பிக்க சரியான முகவரி நீங்கள் தராததும் உள்ளடக்கும்); அல்லது

(b)வாடிக்கையாளர் தங்கத்தை விற்றத் தொகையை சேர்ப்பிக்க வங்கி கணக்கு எண் தரவில்லை என்றால்;

அந்த வாடிக்கையாளர் தங்கத்தின் கருணைக்காலம் முடிந்தவுடன், டிஜிகோல்டு அந்த வாடிக்கையாளர் தங்கத்தை வாடிக்கையாளரின் தங்கத்தை வாங்கும் விலையாக தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு வாங்கும். அந்த விற்பனையில் வரும் தொகையில் (“இறுதி விற்பனை வருமானம்”) இருந்து அந்தத் தங்கத்தை இலவச பாதுகாப்புக்காலத்தையும் தாண்டிப் பாதுகாத்ததற்கு பாதுகாப்பு கட்டணமாக டிஜிகோல்டிற்கு செலுத்த வேண்டிய தொகையைக் கழித்து மீதியை பாதுகாப்பு அறங்காவலர் பராமரிக்கும் வங்கி கணக்கில் போடப்படும், அந்த வங்கி கணக்கிற்கு அவர் மட்டுமே உரிமையாளர் ஆவார். கருணை காலம் முடிந்து மூன்று வருடத்திற்குள் (அதற்குப்பெயர் “இறுதி உரிமைகோரல் காலம்”) நீங்கள் விநியோகஸ்தர் மற்றும்/அல்லது பாதுகாப்பு அறங்காவலரைத் தொடர்புகொண்டு இறுதி விற்பனை வருமானத்திற்கு உரிமை கோரினால், அந்த இறுதி விற்பனை வருமானத்தை நீங்கள் கொடுக்கும் வங்கிக்கணக்கிற்கு மாற்ற தேவையான வழிமுறைகளை பாதுகாப்பு அறங்காவலர் உங்களுக்கு உரைப்பார். இறுதி விற்பனை வருமானத்தை அவ்வாறு வங்கி கணக்கிற்கு மாற்ற சரியான வங்கி கணக்கு விபரங்களை நீங்கள் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கத் தவறும் பட்சத்தில், இறுதி விற்பனை வருமானம் மாற்றப்பட மாட்டாது. எந்த காலத்திலும், இறுதி விற்பனை வருமானம் உங்களுக்குப் பணமாக கையில் தரப்படமாட்டாது. இறுதி உரிமைகோரல் காலத்திற்குள் உங்களது இறுதி விற்பனை வருமானத்தை நீங்கள் கோரவில்லை என்றால், அந்தத் தொகை பிரதம மந்திரி நிவாரண நிதி அல்லது கருணை காலத்திற்கு முன் நீங்கள் குறிப்பிட்ட இது போன்ற வேறு நிதிகளுக்குச் சென்று விடும்.

6. போர்ஸ் மசூர்

இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில் தொழிலாளர் தகராறுகள், வேலைநிறுத்தங்கள், கடவுளின் செயல்கள், வெள்ளம், மின்னல், கடுமையான வானிலை, பொருட்களின் பற்றாக்குறை, ரேஷன், வைரஸ் ட்ரோஜன் போன்ற பிற தூண்டுதல்கள், ஊடுருவல், தளத்தை முறையற்று கையாளுதல், பயன்பாடு அல்லது தகவல் தொடர்பு தோல்விகள், பூகம்பங்கள், போர், புரட்சி, பயங்கரவாத செயல்கள், உள்நாட்டு குழப்பம், பொது எதிரிகளின் செயல்கள், முற்றுகை, தடை அல்லது அரசு அல்லது மற்ற நீதி நிலையம் விதித்த சட்டம், ஒழுங்கு, பிரகடனம், ஒழுங்குமுறை, கட்டளை, கோரிக்கை காரணமாக தளத்தை உபயோகப்படுத்து தடுக்கப்பட்டால், தடைசெய்யப்பட்டால், தாமதமானால் அல்லது தலையிட்டபட்டால், அவை விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு தடுக்க முடியாத செயலாக இருந்தால், அந்த நிலையில் விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு அவ்வாறு சேவை வழங்குவதில் இருந்து விலக்கு தரப்படுகிறது. அவ்வாறு சேவை தரமுடியாமல் போவது அவர்களின் கடமையை மீறும் செயலாகக் கருதப்படமாட்டாது.

7. டிஜிகோல்டு சேவைகளை நிறுத்துதல்

7.1வாடிக்கையாளர் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் அல்லது வாடிக்கையாளர் ஈஓடி நடந்தால், முழு தளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ மாற்ற, ரத்து செய்ய அல்லது உபயோகிக்க முடியாமல் முடக்குவதற்கு டிஜிகோல்டிற்கு முழு உரிமை உண்டு. “வாடிக்கையாளர் ஈஓடி” என்பது பாதுகாப்பு அறங்காவலருக்கு பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தத்தில் உங்கள் சார்பில் பாதுகாப்பு அறங்காவலர் அடமானத்தின் பெயரில் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதைக் குறிக்கும். பாதுகாப்பு அறங்காவலர் முதலில் இந்த விஷயத்தில் அதிகாரம் பெற்றிருக்கும் நீதித்துறை அல்லது சட்டரீதியான அதிகாரியிடம் ஒப்புதல் பெறவேண்டும்.

7.2இந்த விதிமுறைகள் கீழ்கண்ட நிலைமைகளில் செல்லுபடியாகாது:

7.2.1.டிஜிகோல்டு திவாலாகி விட்டால் அல்லது திவாலாகிவிட்டது என்று அறிவிக்கப்பட்டால்;

7.2.2.டிஜிகோல்டு தன் தொழிலை நிறுத்திவிட்டால் அல்லது தொழிலை நிறுத்துவதாக பாதுகாப்பு அறங்காவலரிடம் தெரிவித்தால்;

7.2.3.பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தத்தில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஒன்றை டிஜிகோல்டு மீறினால், அந்த மீறலை பாதுகாப்பு அறங்காவலர் கண்டறிந்து புகாரளித்து அறுபது(60) நாட்களில் டிஜிகோல்டு சரிசெய்யவில்லை என்றால்;

7.2.4.கட்டணங்களை ரத்து செய்ய, டிஜிகோல்டை மூட, கலைக்க, நிர்வாக சீரமைப்பு அல்லது மறுசீரமைக்க (தன்னார்வ திட்டம் அல்லது ஏற்பாடு அல்லது மற்ற வகையில்) பெருநிறுவன செயல்பாட்டின் காரணமாக(மூன்றாம் தரப்பு பெருநிறுவன செயல்பாடு தவிர்த்து), சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால்;

7.2.5.தற்போது இருக்கும் அல்லது பின்னர் வரப்போகும் திவால் ஆகுதல், நொடித்துப்போதல், மூடுதல் போன்ற சட்டத்தின் பெயரில் டிஜிகோல்டு தன்னார்வில் நடவடிக்கை எடுத்தால், அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தால், அல்லது அதன் மொத்த சொத்து அல்லது அதில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ள ரிசீவர், லிக்விடேடர் அல்லது அது போன்ற அதிகாரிகள் நியமிக்க ஒப்புதல் அளித்தால் அல்லது அதன் மறுசீரமைப்பு, லிக்விடக்ஷன் அல்லது கலைப்பிற்கு நடவடிக்கை எடுத்தால்;

7.2.6.டிஜிகோல்டை மூட, திவால் செய்ய அல்லது கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அல்லது சட்டத்திற்கு உட்பட்டு டிஜிகோல்டிற்கு எதிராக பெருநிறுவன முடக்கப்படும் திட்டம் விண்ணப்பிக்கப்பட்டால்;

7.2.7.சட்டப்பூர்வமாக யாரேனும் தன்வசம் எடுத்துக்கொண்டால், அல்லது டிஜிகோல்டின் சொத்திற்கு முழுவதிற்கும் அல்லது ஒரு பகுதிக்கு லிக்விடேட்டர், நீதித்துறை பாதுகாவலர், ரிசீவர், நிர்வாக ரிசீவர், அறங்காவலர் அல்லது அது போன்ற அதிகாரி நியமிக்கப்பட்டால், அல்லது டிஜிகோல்டின் சொத்திற்கு முழுவதிற்கும் அல்லது ஒரு பகுதிக்கு இணைப்பு, வரிசைப்படுத்துதல் அல்லது தண்டனை விதித்தல்(அது போன்ற வேறு நடவடிக்கை) எடுக்கப்பட்டால், அல்லது அதுபோன்ற மறுசீரமைப்பால் டிஜிகோல்டு ஏதாவது சிக்கலில் மாட்டியிருந்தால்; அல்லது

7.2.8.டிஜிகோல்டிற்கு ஒரு லிக்விடேடர் அல்லது இடைக்கால லிக்விடேடர் நியமிக்கப்பட்டால், அல்லது ஒரு ரிசீவர், ரிசீவர் மற்றும் மேலாளர், அறங்காவலர் அல்லது அது போன்ற அதிகாரிகள் டிஜிகோல்டு அல்லது அதன் சொத்துக்களின் மீது நியமிக்கப்பட்டால், அல்லது அது போன்ற ஏதாவது நிகழ்வு நடந்தால்.

7.3பகுதி 7.2 இல் குக்ரிப்பிடப்பட்டுள்ள ஏதாவது நிகழ்வுகள் நடக்கும் பட்சத்தில், உங்களின் வாடிக்கையாளர் தங்கத்தை உங்களுக்கு வழங்குவதற்கு கட்டணம் கட்ட டிஜிகோல்டிடம் போதுமான நிதி இல்லாமல் போனால், வாடிக்கையாளர் தங்கத்தின் ஒரு பகுதியை விற்று அந்த செலவை சமாளிக்க பாதுகாப்பு அறங்காவலருக்கு நீங்கள் இதன் மூலம் அதிகாரம் வழங்குகிறீர்கள்.

7.4பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தங்களின் படி, வாடிக்கையாளரின் நன்மைக்காக பாதுகாப்பு அறங்காவலரின் பெயரில் அடமானத்தில் டிஜிகோல்டு ஒரு கட்டணம் உருவாகியுள்ளது, அது இவை இரண்டிற்கும் பொருந்தும்: a) சேமிப்பு கணக்கில் அவ்வப்போது சேர்க்கப்படும் பணம்; மற்றும் b) அவ்வப்போது டிஜிகோல்டு வாங்கி பெட்டக காப்பாளரிடம் அல்லது பயணத்தில் இருக்கும் டிஜிகோல்டிற்கு சொந்தமான தங்கம்; (மொத்தமாக “பாதுகாப்பு” என்றழைக்கப்படுகிறது). பகுதி 7.1 மற்றும் 7.2 குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் நிகழ்வு நடந்தால், பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தத்தின் படி பாதுகாப்பு அறங்காவலர் (i) நிலுவையுள்ள அனைத்து தொகையையும் கடனாகவும் அதை பாதுகாப்பு அறங்காவலருக்குக் கட்டுமாறும்; மற்றும் (ii) டிஜிகோல்டு தன் வாடிக்கையாளருக்கு தரவேண்டிய தொகையை எடுத்துக்கொள்ள, மீட்க, பெற மற்றும் பாதுகாப்பை நீக்க வேண்டும். பாதுகாப்பை எடுத்துக்கொள்ளும் செயல் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டே நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்:

(i)அப்படி ஒரு பகிர்தலை நடத்த எடுக்கக்கூடிய காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாது மற்றும்/அல்லது

(ii)அப்படி ஒரு பகிர்தலில் நீங்கள் பெறக்கூடிய தொகை டிஜிகோல்டு உங்களுக்கு கடன்பட்டுள்ள தொகையை முற்றிலும் நீக்கிவிடாது;

மேற்கண்டவை தொடர்பாக பாதுகாப்பு அறங்காவலர் எந்த பொறுப்பும் ஏற்பதற்கில்லை.

8. டிஜிகோல்டு சேவைகளை நிறுத்துவதன் விளைவுகள்

8.1.எந்த காரணத்திற்காகவும் அவ்வாறு சேவைகள் நிறுத்தப்பட்டால், பாதுகாப்பு அறங்காவலர் ஒப்பந்தத்துடன் கீழ்கண்ட விதிமுறைகளும் பொருந்தும்:

8.1.1.1 கிராமிற்கும் குறைவான சிறு அளவு தங்கம் இருந்தால் அது விற்கப்பட்டு, இடைத்தரகர்கள் நியமனத்திற்கு(இடைத்தரகர்களுக்கு தர வேண்டிய கட்டணத்துடன் இதர செலவுகள், வாய்ப்பு கட்டணங்கள், அடித்தல் மற்றும் கொண்டு சேர்க்கும் கட்டணங்கள்) ஏற்பட்ட செலவு போக மீதம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் (“கட்டணங்கள்”).

8.1.2.பெரும் அளவு தங்கம் சேமித்திருந்தால், பாதுகாப்பு அறங்காவலர்(நீங்கள் முன்னரே கட்டணம் கட்டாத பட்சத்தில்) உங்கள் தங்கத்தின் ஒரு பகுதியை விற்று இடைத்தரகர்களுக்கான அனைத்துக் கட்டணங்களையும் கட்ட அனுமதிக்கப்படுவார். மீதம் உள்ள தங்கம் இந்த விதிமுறைகளின் படி, அதில் கழிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் நீங்கள் பெறவேண்டிய தங்கத்தின் விவரத்துடன் உங்களிடம் வழங்கப்படும்.

8.2.எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தளம் மற்றும் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்படலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் வாடிக்கையாளர் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டு அனைத்து விபரங்களும் அழிக்கப்படலாம் மேலும்/அல்லது வாடிக்கையாளர் கணக்கு தளம் மற்றும் சேவைகள் தடைசெய்யப்படலாம். மூன்றாம் தரப்பினால் சேவைகள் நிறுத்தப்படுவதற்கு விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு பொறுப்பில்லை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள்.

8.3.ரத்து செய்துவிட்ட பிறகு உங்கள் தகவல் எதுவும் தளத்தில் இருக்காது. உங்கள் கணக்கு முடிக்கப்பட்டவுடன் தகவல்களை நீங்கள் வெளியெடுக்க முடியாது.

8.4.இந்த விதிமுறைகள் நீக்கப்பட்டாலும் கூட உத்தரவாதங்களின் மறுதலிப்பு, பொறுப்புகள் வரம்பு மற்றும் சட்டங்கள் பொருந்தும்.

9. ஆள்கின்ற சட்டம் மற்றும் சர்ச்சை தீர்த்தல்

இந்திய சட்டங்களுட்பட்டு இந்த விதிமுறைகள் இயற்றப்பட்டு நிர்வகிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த விதிமுறைகளில் ஏதேனும் சர்ச்சை என்றால் மும்பை நீதிமன்றங்கள் அதற்கான பிரத்யோக வரம்பைக் கொண்டிருக்கும். இந்த விதிமுறைகளில் ஏதேனும் சர்ச்சை என்றால், இரு தரப்பினரால் கூட்டாக நடுவர் மற்றும் சமரசச் சட்டம், 1996 படி நியமிக்கப்பட்ட நடுவரின் தீர்ப்புப்படி முடிவு எட்டப்படும். சமரசம் நடக்கும் இடம் மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவாக இருக்கும்.

பகுதி – II

10. வாடிக்கையாளர் கணக்கு மற்றும் பதிவு செய்யும் கடமைகள்

10.1.சேவைகளை உபயோகப்படுத்தும் முன், அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் பதிவு செய்யும் முறையை வாடிக்கையாளர் நிறைவு செய்யவேண்டும். வாடிக்கையாளர் கணக்கு துவங்குவதற்கு தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை வாடிக்கையாளர் பின்பற்றுதல் வேண்டும். கேவைசி தேவைகளுக்காக தளத்தில் வாடிக்கையாளர் கொடுக்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்து சேமிக்க விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டிற்கு உரிமை உண்டு. டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகஸ்தரின் தேவைக்கேற்ப கேவைசி தேவைகளுக்காக கூடுதல் ஆவணங்கள் வாடிக்கையாளர் கொடுக்க வேண்டி வரலாம். உங்களின் அடையாளத்தை உறுதி செய்ய அது போல கேள்விகள் கேட்க டிஜிகோல்டு மற்றும் விநியோகஸ்தருக்கு நீங்கள் அங்கீகாரம் வழங்குகிறீர்கள். டிஜிகோல்டு மற்றும் விநியோகஸ்தருக்கு நீங்கள் அவ்வப்போது கொடுக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் கொடுத்த தகவலில் ஏதேனும் தவறு அல்லது மாற்றம் இருந்தால், உடனடியாக சரியான/மாற்றப்பட்ட தகவலை நீங்கள் தரவேண்டும்.

10.2.கேவைசி ஆவணங்கள்/தகவல்கள் தவறாக இருப்பின் அல்லது ஆவணங்கள்/தகவல்களின் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டால் உங்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வாடிக்கையாளர் கணக்கை முடக்க விநியோகஸ்தர் மற்றும்/அல்லது விநியோகஸ்தர் மூலம் டிஜிகோல்டிற்கு உரிமை உண்டு. தவறான கேவைசி ஆவணங்களால் உங்கள் அடையாளத்தை உறுதி செய்வதில் ஏற்படும் தோல்வி மற்றும் உங்கள் கணக்கை சரிபார்ப்பதில் ஏற்படும் சிக்கல் காரணமாக எழும் நஷ்டம், கோரிக்கை செலவு போன்ற அனைத்து இழப்பீடுகளுக்கும் விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டிற்கு நீங்கள் நஷ்டஈடு வழங்கவேண்டும்.

10.3.உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (கேவைசி) மற்றும் சரிபார்த்தல்

10.3.1.ஆர்டர் செய்யும் முன்பு, விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டிற்கு சில கேவைசி ஆவணங்கள் மற்றும் தகவல்கள் தரவேண்டி இருக்கலாம்.

10.3.2.நீங்கள் அந்த ஆவணங்கள் மற்றும் இதர தகவல்கள் விநியோகஸ்தருக்குக் கொடுத்த பிறகு, தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யலாம் (“வாடிக்கையாளர் ஆர்டர்”).

10.3.3.வாடிக்கையாளர் கணக்கு துவங்கிய பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்களை டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகஸ்தர் சரிபார்ப்பதைப் பொறுத்து தான் நீங்கள் தளத்தை உபயோகிப்பது தீர்மானிக்கப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இதன் மூலம் அவ்வாறு சரிபார்த்தலுக்கு டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகஸ்தருக்கு அனுமதி வழங்குகிறீர்கள்.

10.3.4.வாடிக்கையாளர் கணக்கு பதிவு செய்யும் பொழுதோ அல்லது வேறு எப்பொழுது வேண்டுமானாலும் இதுபோல சரி பார்க்க டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகஸ்தருக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

10.4.வாடிக்கையாளர் கடமைகள்

10.4.1.வாடிக்கையாளர் கணக்கின் ரகசியத்தன்மையை பராமரிக்க நீங்களே பொறுப்பு, மேலும் வாடிக்கையாளர் கணக்கின் கீழ் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீங்களே முழு பொறுப்பேற்க வேண்டும். வாடிக்கையாளர் கணக்கு விபரங்களில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கை நடந்தால் அல்லது பாதுகாப்பு மீறல் ஏற்பட்டால் உடனடியாக விநியோகஸ்தருக்கு தகவல் அளிக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவைக்கு நீங்கள் இணங்காமல் இருந்து ஏதேனும் இழப்போ சேதமோ ஏற்பட்டால், அதற்கு டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகஸ்தர் பொறுப்பல்ல. வாடிக்கையாளர் கணக்கு விபரங்களை நீங்கள் பாதுகாப்பாக வைக்கத் தவறி, வாடிக்கையாளர் கணக்கில் அங்கீகரிக்கப்படாத செயல்பாடு நடந்து, அதனால் டிஜிகோல்டு அல்லது விநியோகஸ்தர் அல்லது தளத்தை உபயோகிக்கும் பயனர் யாருக்கேனும் ஏற்படும் இழப்பிற்கு நீங்களே பொறுப்பாகக் கருதப்படும்.

10.4.2.பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த வாடிக்கையாளர் கணக்கு விபரம் சரியாக, முழுமையாக மற்றும் துல்லியமாக இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். சேவைகளைப் பெற மற்றும்/அல்லது தளத்தை உபயோகிக்க வேறு ஒரு வாடிக்கையாளரின் விபரங்களை உபயோகிப்பது கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

10.4.3.நீங்கள் தவறான, துல்லியமில்லாத, சரியில்லாத அல்லது முழுமையில்லாத தகவலைக் கொடுத்தால் (அல்லது நீங்கள் கொடுத்த தகவல் தவறான, துல்லியமில்லாத, சரியில்லாத அல்லது முழுமையில்லாததாக மாறினால்) அல்லது சில காரணங்களால் அந்த விபரம் தவறான, துல்லியமில்லாத, சரியில்லாத அல்லது முழுமையில்லாததாக விநியோகஸ்தர் மற்றும் டிஜிகோல்டு சந்தேகித்தால், அல்லது இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால், விநியோகஸ்தர் மற்றும் விநியோகஸ்தர் மூலமாக டிஜிகோல்டு தளத்தில் உள்ள உங்கள் வாடிக்கையாளர் கணக்கை முடக்க அல்லது நிறுத்த அல்லது ரத்து செய்ய மற்றும் தளத்தை உபயோகப்படுத்தாமல் தடுக்க முழு உரிமை உண்டு.

11. தங்கம் வாங்குதல்

11.1.தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி சந்தை விலையில் 1 ரூபாயில் இருந்து அதிகப்படி தொகை வரை தங்கத்தை நீங்கள் வாங்கலாம். சந்தை விலை என்றால் இந்த தங்கத்தின் விலை இந்தியாவில் உள்ள தங்கக்கட்டி வணிக சந்தையைச் சார்ந்துள்ளது.

11.2.இது போல சந்தையுடன் இணைந்த தங்க விலை அனைத்து சலுகைகளையும் கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையில் தங்கம் வாங்க உதவுகிறது. மேற்கூறியவை உண்மையென்றாலும் கூட, தங்கத்தின் விலை ஒரு நாளில் பலமுறை மாறும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள், அதன்படி உங்கள் ஆர்டரின் கட்டணம் சந்தையுடன் இணைக்கப்பட்ட விலையில் மாறக்கூடும். வாடிக்கையாளர் தங்கத்தை உங்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பதற்கு போதுமான முயற்சி எடுத்தாலும் கூட, சந்தையில் இருக்கும் மற்ற சேவைகளின் விலைக்கு அருகில் அல்லது அதைவிட குறைவாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

11.3.தளத்தில் இருக்கும் கட்டண முறைகளில் ஒன்றில் கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும், டிஜிகோல்டு உட்பட மூன்றாம் தரப்பு வலைத்தளம் நிர்வாகிக்கும் கட்டண முறைக்கு திருப்புதலும் இதில் உள்ளடங்கும். அரசு விதிமுறைகளின்படி வாங்கும் பொழுது/ நிறைவேற்றும் பொழுது/ மறுவிற்பனையின் பொழுது/ தங்க மாற்றத்தின் பொழுது பொருந்தக்கூடிய வரி வசூலிக்கப்படும். ஒரு முறை வாடிக்கையாளர் ஆர்டர் செய்தால், அந்த வாடிக்கையாளர் ஆர்டரை ரத்து செய்யமுடியாது, இருப்பினும் ஏதேனும் காரணத்தினால் கட்டணம் செலுத்த முடியாமல் போனால் வாடிக்கையாளர் ஆர்டர் ரத்தாகிவிடும்.

11.4.வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் முன்பு நீங்கள் கொடுத்த தகவல் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றால் மற்றும் நீங்கள் தங்கம் வாங்க தகுதியானவர் இல்லையென்று விநியோகஸ்தர் மற்றும் /அல்லது டிஜிகோல்டு கருதினால் விநியோகஸ்தர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு அந்த வாடிக்கையாளர் ஆர்டரை ரத்து செய்ய முழு உரிமை பெற்றிருக்கிறது. அதன் படி வாடிக்கையாளர் கணக்கு மாற்றப்படும். விநியோகஸ்தர் மற்றும் டிஜிகோல்டிற்கு திருப்தி ஏற்படும் கேவைசி மற்றும் ஆவணங்கள் பெரும் வரை அந்த வாடிக்கையாளர் கணக்கை உறையவைக்க விநியோகஸ்தருக்கும் டிஜிகோல்டிற்கும் உரிமை உண்டு.

11.5.டிஜிகோல்டு மூலம் கட்டணங்கள் பெறப்பட்டு KYC தகவல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக கண்டறியப்பட்டால், டிஜிகோல்டு வாடிக்கையாளர் ஆர்டரை உறுதிப்படுத்தி அத்தகைய ஆர்டர் செய்து 3 (மூன்று) வேலை நாட்களுக்குள் அது பொருத்தமானதாக கருதுகின்ற முறையில், விலைப்பட்டியல் வழங்கும்.

11.6.இந்த விதிமுறைகளில் ஏதேனும் மாறாக குறிப்பிட்டிருந்தாலும், விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டுக்கு அதனுடைய முழு விருப்பப் படி, எந்தக் காரணத்திற்காகவும், வாடிக்கையாளரை ஏற்றுக்கொள்ள அல்லது மறுக்க உரிமை உள்ளது.

11.7.டிஜிகோல்டு மூலம் கட்டணங்கள் பெறப்பட்டு, இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர் ஆர்டர் மறுக்கப்பட்டால், அத்தகைய கட்டணங்கள் தளத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உங்கள் கணக்குடன் தொடர்புடைய வங்கி கணக்கிற்கு திருப்பிச் செலுத்தப்படும்.

12. தங்கம் வழங்குதல்

12.1.இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர் தங்கம் வழங்குதலை கொள்முதல் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தளம் சேவைகள் வழங்குகிறது.

12.2.தளத்தைப் பயன்படுத்தி வாடிக்கையளர் தங்கம் வழங்குவதை கொள்முதல் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது (“வழங்கல் கோரிக்கை”).

12.3.வழங்கல் கோரிக்கையை விடுத்தவுடன், நீங்கள் பொருத்தமான கட்டணங்கள் செலுத்தி வழங்கல் கோரிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் வாடிக்கையாளர் கணக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட வாடிக்கையாளர் தங்கத்தின் அளவுக்கு இணையாக உங்கள் வாடிக்கையாளர் கணக்கு தற்காலிகமாக டெபிட் செய்யப்படும் (“வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கம்”).

12.4.வழங்கல் கோரிக்கை உறுதிப்படுத்தப்பட்ட 7 (ஏழு) வேலை நாட்களுக்குள் அல்லது டிஜிகோல்டுக்கு தேவைப்படக்கூடிய அத்தகைய கூடுதல் காலத்திற்குள், டிஜிகோல்டு உங்களால் குறிப்பிடப்பட்ட அஞ்சல் முகவரிக்கு வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்தை அனுப்ப ஏற்பாடு செய்யும். அத்தகைய வழங்கல் கோரிக்கையை செயல்முறைப்படுத்த தளத்தில் உங்களால் சரியான முகவரி வழங்கப்படுவைத உறுதிப்படுத்த நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள். டிஜிகோல்டு மூலம் வழங்கல் கோரிக்கை செயல்முறைப்படுத்தப்பட்டவுடன் அஞ்சல் முகவரியை மாற்றும் உரிமை உங்களுக்கு இல்லை.

12.5.நீங்கள் வழங்கப்படும் பேக்கேஜை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் மேலும் பேக்கேஜ் சிதைக்கப்பட்டிருந்தால் வழங்குதலை ஏற்கக்கூடாது. எனினும், நீங்கள் வழங்கப்பட்ட பேக்கேஜ் சிதைக்கப்பட்டிருப்பதை பார்த்தால், நீங்கள் உடனே அது குறித்து டிஜிகோல்டுக்கு தெரிவித்து இது தொடர்பாக டிஜிகோல்டுக்கு தேவைப்படும் அத்தகைய மற்ற தகவல்களை வழங்க வேண்டும் (“திருப்பிக் கொடுக்கும் கோரிக்கை”). வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்தின் அசல் பேக்கேஜ் டிஜிகோல்டு-யிடம்14 (பதினான்கு) வேலை நாட்களுக்குள் டிஜிகோல்டு மூலம் குறிப்பிடப்பட்ட முறையில், திருப்பி வழங்கப்பட்டு, மேலும் டிஜிகோல்டு மூலம் எழுத்துப்பூர்வமான கோரிக்கை ஒப்புதலளிக்கப்பட்டவுடன், டிஜிகோல்டு உங்களால் குறிப்பிடப்பட்ட அஞ்சல் முகவரிக்கு வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்தை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யும். அவ்வாறு அனுப்புவதற்கான செலவை டிஜிகோல்டு ஏற்றுக்கொள்ளும். எனினும், அற்பமாக நியாயப்படுத்தப்படாத முறையில் நீங்கள் திருப்பிக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தால், தளத்தில் சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து உங்களைத் தடுப்பது அல்லது தவறிழைத்தோர் பட்டியலில் சேர்ப்பது உட்பட, அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க விநியோகிப்பாளர் மற்றும் /அல்லது டிஜிகோல்டுக்கு உரிமை உள்ளது.

12.6.நீங்கள் வழங்கல் ரசீதில் கையெழுத்திட்டவுடன், டிஜிகோல்டு உடன் செய்யப்பட்ட வழங்கல் கோரிக்கையின் விதிமுறைகளில் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கம் பெற்றுக்கொண்டதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அத்தகைய வழங்கல்கள் தொடர்பான அடுத்தடுக்க புகார்கள் எதற்கும் மற்றும்/அல்லது உங்கள் தரப்பில் இந்த விதிமுறைகளுடன் நீங்கள் இணங்க தவறுவதற்கு (சூழ்நிலைக்கு ஏற்ப), எந்தச் சூழ்நிலையிலும், டிஜிகோல்டு உங்களுக்கு எதையும் திருப்பிக் கொடுக்கவும் /மாற்றுவதற்கும் பொறுப்பேற்காது.

12.7.டிஜிகோல்டு வழங்கல் கோரிக்கையைப் பெற்றவுடன், வாடிக்கையாளர் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்திற்காக வாடிக்கையாளர் கணக்கு டெபிட் செய்யப்படும்.

12.8.வழங்கப்படும் நேரத்தில் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்தைப் பெற நீங்கள் இருப்பதை உறுதிப்படுத்துதல் உங்களுடைய பொறுப்பாகும். வழங்கப்படும் நேரத்தில் நீங்கள் இல்லை என்றால், டிஜிகோல்டு கூரியர் முகவர் அதையே டிஜிகோல்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு முன் மீண்டும் பொருளை வழங்க முயற்சிக்கலாம். வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கம் டிஜிகோல்-யிடம் திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலையில், டிஜிகோல்டு பேக்கேஜ் சிதைக்கப்படவில்லை என்று கருதினால், நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் (ஏதேனும் இருந்தால்) கழித்த பின், வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்திற்காக வாடிக்கையாளர் கணக்கு கிரெடிட் செய்யப்படும். நீங்கள் மீண்டும் வழங்குவதற்கான கோரிக்கையை விடுக்க வேண்டும் என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது, வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்தை வழங்குவதற்கான பொருந்தக்கூடிய கட்டணங்களை நீங்களே முற்றிலும் ஏற்க வேண்டும்.

12.9.எதிர்பாராத சூழ்நிலை காரணமாக வழங்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்தை டிஜிகோல்-ஆல் வழங்க முடியவில்லை என்றால், டிஜிகோல்டு அது குறித்து உங்களுக்கு தெரிவித்து குறிப்பிட்ட முறைகளின் மூலம் வழங்குதலை செயல்முறைப்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இதன்மூலம் வழங்குதல் முழுமையடைய தேவையான கூடுதல் செலவுகள் மற்றும் கட்டணங்கள் எதையும் ஏற்க ஒப்புக்கொள்கிறீர்கள்.

12.10.டிஜிகோல்டு-ஆல் அத்தகைய குறுமட்டத்திற்கு கீழ் இருக்கும் பகுதியளவு தங்கத்தை இந்த நோக்கத்திற்காக என்று டிஜிகோல்டு குறிப்பிட்டுள்ளபடி வாடிக்யைளர் அத்தகைய பகுதியளவிற்காக (“குறுமட்ட அளவு”) கோரிக்கை விடுத்திருந்தாலும் கூட வழங்க முடியாது. குறுமட்ட அளவு அவ்வப்போது மாற்றப்படும் காரணத்தால் அது குறித்து தீர்மானிக்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நீங்கள் தளத்தை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறுமட்ட அளவுக்கு கீழே இருக்கும் தங்கம் உங்கள் வழங்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய வாடிக்கையாளர் தங்கம் தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விற்பனை விலைகளின் அடிப்படையில் டிஜிகோல்டு மூலம் விற்பனை செய்யப்படுவதற்கு மாறாக விற்கப்படும் மேலும் பதிலாக உங்களால் விவரங்கள் வழங்கப்பட்ட உங்கள் வங்கி கணக்கில் பொருந்தகூடிய விற்பனை வருமானத்தை நீங்கள் பெறுவீர்கள் என்பதை தயவுசெய்து கவனிக்கவும். உங்களால் வழங்கப்பட்ட கணக்கு எண்ணில் ஏதாவது தவறு இருந்தால், விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு அதற்காக பொறுப்பேற்க மாட்டார்கள்.

12.11.இந்த விதிமுறைகளில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தாலும், டிஜிகோல்டுக்கு இங்குள்ள விதிமுறைகளுடன் இணங்காத வாடிக்கையாளர் கோரிக்கையை நிராகரிக்க உரிமை உள்ளது, மேலும் அதற்கான காரணங்களால் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்படும்.

12.12.வாடிக்கையாளர் கணக்கில் செய்யப்படும் மாற்றங்களின் அடிப்படையில் (வாடிக்கையாளர் ஆர்டர்கள் மற்றும்/அல்லது வாடிக்கையாளர் கோரிக்கைகளுக்கு பதிலாக), அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் நீங்கள் வழங்கிய ஆர்டர்கள் மற்றும்/ அல்லது வாடிக்கையாளர் கோரிக்கைகளுடன் ஒன்றாக இல்லை என்று நீங்கள் நினைத்தால், அத்தகைய அடையாளம் காணப்பட்ட முரண்பாடுகளைக் கவனித்துக் கொள்வதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடிய விநியோகிப்பாளரை [-]-ல் (அல்லது இது தொடர்பாக விநியோகிப்பாளரால் தெரிவிக்கப்பட்ட அத்தகைய முகவரியில்) நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

12.13.உங்களால் வேறு ஏதாவது பயனருக்கு வாடிக்கையாளர் தங்கத்தை அடமானம் வைக்கவோ மாற்றம் செய்யவோ முடியாது, மேலும் டிஜிகோல்டு மூலம் குறிப்பாக அனுமதிக்கப்படாத வரையில், வாடிக்கையாளர் கணக்கு பரிமாற்றம் செய்யக்கூடியது அல்ல என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. நீங்கள் இறந்துவிட்டால், டிஜிகோல்டு மூலம் குறிப்பாக அனுமதிக்கப்பட்டால், பெட்டகத்தில் இருக்கும் அத்தகைய வாடிக்கையாளர் தங்கத்தின் உரிமை மற்றும் வாடிக்கையாளர் கணக்கு உங்களுடைய சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு தேவையான சான்றுகள் வழங்கப்பட்டவுடன் மட்டுமே மாற்றம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து, உங்கள் சட்ட வாரிசுகள் வாடிக்கையாளர் தங்கம் மற்றும் வாடிக்கையாளர் கணக்கு நோக்கங்களுக்காக இதன் பின்னர் வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் மற்றும் விதிமுறைகள் உங்களுடைய சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு பொருந்தும்.

12.14.தளம் ஷாப்பிங் செய்யக்கூடிய பொருட்களைத் தான் காட்சிப்படுத்துகிறது என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. சில பொருட்கள் ஸ்கிரீன் குறைபாடுகள் மற்றும் புகைப்பட நுட்பங்கள் காரணமாக உண்மையான அளவை விட சற்று பெரியதாகவும் சிறியதாகவும் தோன்றலாம். இதற்காக விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டு எந்த சட்ட நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள். தளத்தில் தயாரிப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த விநியோகிப்பாளர் முயற்சி செய்ய வேண்டும்.

12.15.டிஜிகோல்டு அல்லது விநியோகிப்பாளர் நேரடியாக காரணமில்லாத காரணங்களால், தளத்தை அணுக ஏதாவது சாதனம் பயன்படுத்தப்படுவதால் அல்லது தளத்திலுள்ள சில கணினி பிழைகளின் காரணத்தால் தகவல்கள் தளத்தில் துல்லியமற்றதாக காட்சிப்படுத்தப்படலாம். விநியோகிப்பாளருக்கு அவருடைய முழு விருப்பப்படி பிழைகள் ஏற்படும் போது அனைத்து மற்றும் எந்தப் பிழைகளையும் திருத்த உரிமை உள்ளது, மற்றும் விநியோகிப்பாளர் அல்லது டிஜிகோல்டுக்கு ஏதாவது துல்லியமற்ற அல்லது பிழையான விலைகளின் அடிப்படையில் உங்களால் செய்யப்பட்ட கோரிக்கைகள் /ஆர்டர்கள் எதையும் ஏற்காமல் இருக்க உரிமை உள்ளது.

12.16.தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் நிலையானவை மேலும் பேச்சுவார்த்தைக்குட்பட்டவை அல்ல. தளத்திலுள்ள விலைகள் உங்களுக்கு அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை.

13. வாடிக்கையாளர் தங்கத்தை விற்கவும்

13.1.தளத்திலுள்ள விற்பனை விலைகளின் அடிப்படையில் சந்தை நேரங்களில் வாடிக்கையாளர் தங்கத்தை விற்க உங்களுக்கு விருப்பத்தேர்வு வழங்கப்படலாம். விலைகள் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், நீங்கள் விற்பனை கோரிக்கையை, படிவத்தில் மற்றும் டிஜிகோல்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் உறுதிப்படுத்த வேண்டும் (“விற்பனை கோரிக்கை”). விற்பனை கோரிக்கையின் படி விற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படும் வாடிக்கையாளர் தங்கத்தின் அளவிற்கு இணையாக உங்கள் வாடிக்கையாளர் கணக்கு டெபிட் செய்யப்படும் (“விற்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கம்”).

13.2.விற்பனை கோரிக்கை உறுதிப்படுத்தப்பட்ட 2 (இரண்டு) வேலை நாட்களுக்குள் அல்லது தேவையான கூடுதல் காலத்திற்குள், விற்பனை கோரிக்கை தொடர்பான கட்டணம், அத்தகைய விற்பனை கோரிக்கை விடுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிடப்பட்ட விற்பனை விலையில் டிஜிகோல்டு மூலம் வழங்கப்படும். உங்களால் விவரங்கள் வழங்கப்பட்ட உங்கள் வங்கி கணக்கிற்கு அத்தகைய கட்டணங்கள் செலுத்த டிஜிகோல்டு ஏற்பாடு செய்யும். உங்களால் வழங்கப்பட்ட ISC குறியீடு போன்று, கணக்கு எண்ணில் ஏதேனும் தவறு இருந்தால், அதற்காக டிஜிகோல்டு பொறுப்பேற்காது.

13.3.டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகிப்பாளர் வர்த்தக பொன் சந்தை செயல்பாட்டில் இருக்கும் போது மட்டுமே சிறந்த முயற்சியின் அடிப்படையில் இந்த சேவையை வழங்குகிறது என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. டிஜிகோல்டு மற்றும் விநியோகிப்பாளர் இந்த விருப்பத்தேர்வு உங்களுக்கு எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்று எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கவில்லை. மேலும், விற்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்தை வாங்குபவர் டிஜிகோல்டு அல்லது மற்றொரு தரப்பினராக இருக்கலாம் (விற்கப்பட்ட வாடிக்கையாளர் தங்கத்தை வாங்க ஆர்வமாக இருப்பது). விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு அத்தகைய மூன்றாம் தரப்பு வாங்குபவரின் எந்த நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

13.4.டிஜிகோல்டு மூலம் இது தொடர்பாக அதனுடைய முழு விருப்பப்படி அவ்வப்போது மிகவும் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட படி அத்தகைய காலத்திற்கு உங்கள் வாடிக்கையாளர் தங்கத்திற்கான இலவச சேமிப்பிடம் உங்களுக்கு வழங்கப்படும் மற்றும் தளத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும் (“இலவச சேமிப்பு காலம்”). இலவச சேமிப்பு காலம் முடிந்த பின், டிஜிகோல்டுக்கு தளத்தில் குறிப்பிட்டு அவ்வப்போது ஏற்படும் திருத்தங்களின் படி அத்தகைய விகிதத்தில் அத்தகைய வாடிக்கையாளர் தங்கத்திற்காக சேமிப்பு கட்டணங்கள் விதிக்க உரிமை உள்ளது. கட்டணங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் சதவீத தொகையின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் இருக்கின்ற தங்கத்தை கழிப்பதன் மூலம் விதிக்கப்படும். இந்த சேமிப்பு கட்டணங்கள் குறித்து புரிந்து கொள்ள தளத்தை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சரிபார்க்கவும் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் தங்கத்தின் இருப்பு நிலை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் டிஜிகோல்டு-ஆல் சேமிப்பு கட்டணங்களைக் கழிக்க முடியவில்லை என்றால், கேள்விக்குறியாக இருக்கும் தேவையான அல்லது அவசியமான செலுத்தப்படாத சேமிப்பு கட்டணங்களை மீட்க பெட்டகத்தின் காப்பாளர் உடன் இருக்கும் உங்கள் வாடிக்கையாளர் தங்கத்தின் அத்தகைய பகுதியை விற்க டிஜிகோல்டுக்கு உரிமை உள்ளது.

13.5.வாடிக்கையாளர் தங்கத்திற்காக உங்களுக்கு போட்டி விலை வழங்க நியாயமான முயற்சி மேற்கொள்ளப்படும் போது, உங்களுக்கு வழங்கப்படும் விலை சந்தையிலுள்ள மற்ற விலைகளுடன் ஒப்பிடும் படி அல்லது நெருக்கமாக இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

13.6.தங்கம் வாங்கிய 5 நாட்களுக்கு உள்ளாக அதை நீங்கள் விற்க முடியாது. 5 நாட்களுக்கு முந்தைய காலங்களில் வாங்கி சேர்க்கப்பட்ட தங்கத்தை விற்க முடியும்.

14. தளம் மற்றும் சேவைகளின் பயன்பாடு

14.1.சேவைகள் உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் வேறு ஏதாவது ஊடகத்தின் தளத்தில் (தளத்தை நீங்கள் அணுகுவதற்குப் பதிலாக) காட்சிப்படுத்தப்படும் வேறு ஏதாவது தகவல்கள் மற்றும்/அல்லது தங்கத்தின் விளக்கங்கள் அல்லது தங்கத்தின் விலையை வெளியிட மாட்டேன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். சேவைகளிலிருந்து கிடைக்கும் ஏதாவது தகவல்கள், மென்பொருள், தயாரிப்புகள் அல்லது சேவைகளை நீங்கள் மாற்றவோ, நகலெடுக்கவோ, விநியோகிக்கவோ, அனுப்பவோ, காட்சிப்படுத்தவோ, செயல்படுத்தவோ, படியெடுக்கவோ, வெளியிடவோ, உரிமம் பெறவோ, அதிலிருந்து வருவிக்கப்பட்ட பணிகளை உருவாக்கவோ, பரிமாற்றம் செய்யவோ கூடாது.

14.2.இந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைக்கு உட்பட்டு, நீங்கள் இதன்மூலம் டிஜிகோல்டு மற்றும் விநியோகிப்பாளருக்கு பிரத்தியேகமற்ற, உலகளாவிய, உரிமைத்தொகை இல்லாத உரிமையை இவைகளுக்கு வழங்குகிறீர்கள் (a) உங்களுக்கு சேவைகள் வழங்க தேவையான அளவிற்கு ஒவ்வொரு நிகழ்விலும் முற்றிலும், உங்கள் தகவல்களைச் சேகரிக்க, சேமிக்க மற்றும் அனுப்ப, மற்றும் (b) சேவைகள் மூலம் செயல்படுத்த அல்லது நீங்கள் வழிநடத்தும் படி உங்கள் தகவல்களை விநியோகிக்க மற்றும் பொதுவில் செயல்பட மற்றும் காட்சிப்படுத்த உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அல்லது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும். இது தொடர்பாக விநியோகிப்பாளரால் தீர்மானிக்கப்படும் அத்தகைய முறையில் தங்கம் வாங்குவதற்கு தொடர்பான எந்த சேவைகளுக்காகவும் தங்கம் வாங்கும் போது அல்லது மற்றப்படி தளத்தைப் பயன்படுத்தும் போது உங்களால் உருவாக்கப்படும் தகவல்கள் எதையும் பயன்படுத்துவதற்காக மற்றும்/அல்லது பகிர்ந்து கொள்வதற்காக பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தேவைக்கேற்ப விநியோகிப்பாளரிடம் நீங்கள் உங்கள் ஒப்புதலை வழங்குவீர்கள். விநியோகிப்பாளர் உங்கள் தகவல்களை டிஜிகோல்டு உடன் பகிர்ந்து கொள்ளலாம், அவர் இதையொட்டி, பாதுகாப்பு பொறுப்பாட்சியராக அவர்களின் கடமைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பாதுகாப்பு பொறுப்பாட்சியரிடம் உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் தகவல்கள் தொடர்ந்து பிரிவு 21-ல் குறிப்பிடப்பட்டுள்ள இரகசியத்தன்மை பொறுப்புகளால் நிர்வகிக்கப்படும். தளத்தில் தங்கம் வாங்கும் போது உங்களால் உருவாக்கப்படும் எந்த தகவல்களுக்கும் டிஜிகோல்டு உரிமையாளராக இருக்கும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

14.3.நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி உத்தரவாதமளிப்பது என்னவென்றால்: (i) உங்கள் தகவல்கள் அனைத்தையும் விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டுக்கு வழங்க மற்றும் இந்த விதிமுறைகளில் விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை வழங்க தேவையான அனைத்து உரிமைகள், வெளியீடுகள் மற்றும் அனுமதிகளை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் மற்றும் (ii) இந்த விதிமுறைகளின் கீழ் உங்களால் அங்கீகரிக்கப்பட்ட படி விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டு மூலம் உங்கள் தகவல்களின் பயன்பாடு மற்றும் அதைப் பரிமாற்றம் செய்தல் ஏதாவது அறிவுசார்ந்த சொத்துரிமைகள், தனியுரிமைகள், அல்லது வெளியீடு உரிமைகள், மற்றும் இங்கு வெளியிடப்பட்டுள்ள அங்கீகாரம் ஏதாவது பொருந்தக்கூடிய தனியுரிமை கொள்கைகளின் விதிமுறைகளுடன் முரணாக இல்லாமல் இருப்பது உட்பட இவைகள் மட்டுமே இல்லாமல் எந்த மூன்றாம் தரப்பினரின் உரிமைகளையும் எந்தச் சட்டங்களையும் மீறவில்லை. இந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகளின் கீழ் அதனுடைய பாதுகாப்பு பொறுப்புகளைத் தவிர, உங்கள் தகவலுக்காக விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு எந்தப் பொறுப்புகளையும் ஏற்கவில்லை அல்லது உட்படுத்தப்படவில்லை, மற்றும் உங்கள் தகவலுக்கு மற்றும் அதனுடைய பயன்பாடு, வெளிப்படுத்துதல், சேமித்தல், அல்லது அனுப்புதல் ஆகியவற்றின் விளைவுகளுக்கு நீங்களே முற்றிலும் பொறுப்பாவீர்கள்.

14.4.எதிர்பாராத சூழ்நிலை காரணமாக செயல்படுவதில் தாமதம் ஏற்படுதல் அல்லது தவறுதல் அல்லது தகவல்களின் ஊழல் போன்று அதனுடைய கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட காரணங்களால், ஏதாவது தகவல்கள், தொழில்நுட்பம் அல்லது மற்றப்படி விவரங்களின் இழப்பிற்கு, அல்லது உங்களால் வழங்கப்பட்ட விவரங்களுக்கு விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு பொறுப்பேற்க மாட்டார்கள்.

14.5.டிஜிகோல்டுக்கு சேவைபுரிய விரும்பும் இடங்கள் மற்றும் பின்கோடுகளைத் தீர்மானிக்க முழு விருப்புரிமை உள்ளது.

14.6.பராமரிப்பு, பழுதுபார்ப்புகள், மேம்படுத்தல்கள், அல்லது வலையமைப்பு அல்லது உபகரணங்களின் செயலிழப்பு உட்பட, சேவைகள் வழங்குவதில் இடையூறு ஏற்படலாம். விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டு தொடர்ந்து சேவைபுரிய முயற்சிக்கிறார்கள்; எனினும், அனைத்து ஆன்லைன் சேவைகளிலும் எப்போதாவது இடையூறுகளும் செயலிழப்புகளும் ஏற்படுகின்றன. விளைவாக நீங்கள் பாதிக்கப்படும் எந்த இடையூறு அல்லது இழப்பிற்கும் விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டு பொறுப்பல்ல.

14.7.டிஜிகோல்டு எந்த நேரத்திலும் குறிப்பிட்ட சாதனங்கள் மற்றும் தளங்களுக்கான ஆதரவு மற்றும் குறிப்பிட்ட அம்சங்கள் உட்பட, சில அல்லது அனைத்து சேவைகளையும் நிறுத்தலாம்.

15. வாடிக்கையாளரின் கணக்கை இடைநிறுத்துதல் / மூடல்

15.1.டிஜிகோல்டு, அதனுடைய விருப்பப்படி, கணக்கில் மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் நடைபெறுவதாக தோன்றினால், வாடிக்கையாளர்களின் வாடிக்கையாளரை கணக்கை இடைநிறுத்தலாம். நீங்கள் ஏதாவது சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள் அல்லது வாடிக்கையாளரின் கணக்கு சட்டவிரோதமான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்று விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு கருதினால், விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டுக்கு அதனுடைய தளத்தில் சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து உங்களைத் தடுப்பது அல்லது தவறிழைத்தோர் பட்டியலில் சேர்ப்பது அல்லது தளத்தின் வழியாக சேவைகளுக்கான உங்கள் அணுகலை தடுப்பது அல்லது அத்தகைய சட்டவிரோதமான செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரிவிப்பது உட்பட, அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உள்ளது.

15.2.டிஜிகோல்டு மற்றும் விநியோகிப்பாளர் இடையிலான ஏற்பாடு நிறுத்தப்பட்டால் அல்லது மற்றப்படி விநியோகிப்பாளர் டிஜிகோல்டு உடன் இருக்கும் தொடர்பை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால் உங்கள் வாடிக்கையாளர் கணக்கு மூடப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மீதமுள்ள தங்கத்தை www.safegold.com–ல் அணுகலாம் மற்றும் டிஜிகோல்டு தொடர்ந்து சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவை வழங்கலாம் மற்றும் உங்கள் மீதமுள்ள தங்கத்தை வழங்க / விற்பனை செய்ய உதவலாம்.

15.3.ஏதாவது தொழில்நுட்ப செயலிழப்பு / தளத்திலுள்ள பிரச்சனை மற்றும்/அல்லது அதற்கு காரணமில்லாத நடவடிக்கைகள் /விடுபாடுகள் தொடர்பாக ஏற்படக்கூடிய எந்த இழப்பிற்கும்/பொறுப்பிற்கும், எந்த முறையிலும் எதுவாகிலும், விநியோகிப்பாளர் ஒவ்வொரும் மற்றும் டிஜிகோல்டு பொறுப்பேற்க மாட்டார்கள் / உட்படுத்தப்பட மாட்டார்கள்.

15.4.உங்கள் வாடிக்கையாளர் கணக்கில் இருக்கக்கூடிய ஏதாவது முறைகேடுகள் அல்லது முரண்பாடுகள் குறித்து, எந்தச் சூழ்நிலையிலும் பரிவர்த்தனை நாட்களிலிருந்து 10 (பத்து) நாட்களுக்கு மிகாமல், நீங்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும், தவறினால் கணக்கில் எந்தப் பிழைகளும் முரண்பாடுகளும் இல்லை என்று கருதப்படும். விதிமுறைகளுக்கு இணங்க, வாடிக்கையாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் அத்தகைய மற்ற விவரங்கள் (செலுத்தப்பட்ட கட்டணங்கள் அல்லது பெறப்பட்டது உட்பட, ஆனால் இவைகள் மட்டுமே அல்லாமல்) மின்னணு அல்லது ஆவண வடிவத்தில், விநியோகிப்பாளர் மற்றும்/ அல்லது டிஜிகோல்டு மூலம் வாடிக்கையாளருக்கு எதிராக பராமரிக்கப்படும் அனைத்து பதிவுகளும், அத்தகைய அறிவுறுத்தல்களின் உறுதியான ஆதாரமாக கருதப்படும்.

16. கட்டணங்கள்

16.1.தளத்தின் பயன்பாடு மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய அனைத்து கட்டணங்கள் மற்றும் விலைகளுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள் என்பதை நீங்கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும், செலுத்த வேண்டிய கட்டணங்களின் விவரங்கள் (அத்தகைய கட்டணங்கள் மற்றும் அதனுடைய அளவு தொடர்பான விதிமுறைகள் உட்பட, ஆனால் இவைகள் மட்டுமே அல்லாமல்), தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டணங்களும் விலைகளும் அவ்வப்போது திருத்தப்படலாம் மற்றும் செலுத்த வேண்டிய தற்போதைய கட்டணங்கள் மற்றும் விலைகளைச் சரிபார்க்க தளத்தைப் பார்வையிடுதல் உங்களுடைய பொறுப்பாகும் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.

16.2.ஒரு முறை செலுத்தப்படும், கட்டணங்கள் மற்றும் விலைகள் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என்பது இதன்மூலம் தெளிவுபடுத்துப்படுகிறது.

16.3.தளத்தின் பயன்பாட்டிற்காக மற்றும்/அல்லது நீங்கள் வாங்கும் வாடிக்கையாளர் தங்கத்திற்காக செலுத்தப்படும் பணம் அனைத்தும் கட்டாயமாக இருந்திய ரூபாயில் இருக்க வேண்டும்.

16.4.சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தளத்திலுள்ள பணம் செலுத்தும் முறைகள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளும் போது, டிஜிகோல்டு இவைகள் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த இழப்பு அல்லது சேதம் குறுத்தும் எதுவாகிலும், எந்த விதமான பொறுப்புகளையும் ஏற்காது:

16.4.1.எந்தவொரு பரிவர்த்தனைக்கும் அங்கீகாரம் இல்லாதது, அல்லது

16.4.2.பணம் செலுத்துவதற்காக உங்களால் பயன்படுத்தப்படும் வங்கி/கள் மற்றும் / அல்லது மற்ற நிறுவனங்கள் மற்றும் உங்களுக்கு இடையில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னமைக்கப்பட்ட வரம்பை மீறுதல், அல்லது

16.4.3.பரிவர்த்தனை மூலம் ஏற்படக்கூடிய பணம் செலுத்தல்கள் பிரச்சனைகள் எதுவும், அல்லது

16.4.4.வேறு ஏதாவது காரணங்கள் எதுவாகிலும் பரிவர்த்தனையை நிராகரித்தல்

16.5.நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால் டிஜிகோல்டு தற்காலிகமாக/நிரந்தரமாக அணுகலை நிராகரிக்கலாம் அல்லது வாடிக்கையாளர் கணக்கை இடைநிறுத்தலாம்/நிறுத்தலாம். டிஜிகோல்டுக்கு இருக்கும் மற்ற உரிமைகள் மற்றும் தீர்வுகளுக்கு வரம்பு இல்லாமல், அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதற்கு உரிமை உள்ளது.

17. உறுப்பினர் தகுதி

இந்திய ஒப்பந்தங்கள் சட்டம், 1872 கீழ் சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளக்கூடிய மற்றும் இந்தியாவில் வசிக்கும் நபர்களுக்கு மட்டுமே தளத்தின் பயன்பாடு மற்றும்/அல்லது சேவைகள் கிடைக்கும். இளையவர்கள், நொடித்தவர்கள் மற்றும் தெளிவற்ற மனம் கொண்டவர்கள் தளம் அல்லது சேவைகளைப் பயன்படுத்த தகுதி அல்லாதவர்கள் உட்பட இந்திய ஒப்பந்தங்கள் சட்டம், 1872 –இன் அர்தத்தின் படி “ஒப்பந்தத்திற்கு தகுதியற்றவர்கள்”. 18 வயதிற்குட்பட்டவர்கள் எவரும் தளத்தில் பதிவு செய்யக்கூடாது மற்றும் ஏதாவது சேவைகள் தொடர்பாக தளத்தில் பரிவர்த்தனை செய்யவோ பயன்படுத்தவோ கூடாது. தளம் மற்றும் / அல்லது ஏதாவது சேவைகளைப் பயன்படுத்த அத்தகைய நபருக்கு தகுதியில்லை என்று கண்டறியப்பட்டால் அல்லது டிஜிகோல்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் எந்த நபரின் உறுப்பினர் தகுதியையும் இரத்து செய்ய மற்றும்/அல்லது தளம் மற்றும்/அல்லது ஏதாவது சேவைகளுக்கான அத்தகைய நபரின் அணுகலை நிராகரிக்க டிஜிகோல்டுக்கு உரிமை உள்ளது.

18. தொடர்பின்மை

18.1.தங்கம் வாங்க/விற்க தகவலறிந்த முடிவெடுக்க உங்களுக்கு போதுமான அனுபவம் மற்றும் அறிவு உள்ளது என்று நீங்கள் விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டுக்கு பிரதிநிதித்துவப்படுத்தி உத்தரவாதமளிக்கிறீர்கள். விநியோகிப்பாளர் அல்லது டிஜிகோல்டு மூலம் கிடைக்கும் தகவல்களை நீங்கள் நம்பவில்லை மற்றும் விநியோகிப்பாளர் அல்லது டிஜிகோல்டு தங்கத்தின் அத்தகைய கொள்முதல்/மீண்டும் விற்பனை செய்தல் குறித்து எதையும் பரிந்துரைக்கவில்லை என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுக்கும் விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டுக்கும் இடையே எந்த உரிமையாளர்-முகவர் தொடர்பும், எந்த ஆலோசகர் – ஆலோசனை பெறுபவர் தொடர்பும், எந்தப் பணியாளர்-பணியமர்த்துனர் தொடர்பும், எந்தக் கிளைஞர்-முகமை அளிப்பவர் தொடர்பும் அல்லது எந்தக் கூட்டாண்மை தொடர்பும் உட்பட இவைகள் மட்டுமே இல்லாமல் விற்பனையாளர்-வாங்குபவர் தவிர வேறு எந்த விதமான தொடர்புகளும் இருக்கக்கூடாது.

18.2.டிஜிகோல்டு மற்றும் விநியோகிப்பாளர் முதலீடு தயாரிப்புகள் எதையும் வழங்க / கையாள / அளிக்கவில்லை மற்றும் எந்த விதமான உத்தரவாதமும் உறுதியளிக்கப்பட்ட வருமானமும் வழங்கவில்லை என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் மேலும் பல்வேறு காரணிகள் மற்றும் அழுத்தம் காரணமாக தங்கத்தின் மதிப்பு வேறுபடலாம் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.

19. மின்னணு ஆர்டர் ஆபத்துக்கள்

வர்த்தக இணைய சேவை வழங்குனர்கள் 100% நம்பகமானவர்கள் இல்லை மற்றும் இந்த சேவைக வழங்குனர்களின் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் செயலிழப்பு இணைய அடிப்படையிலான ஆர்டர் பதிவை பாதிக்கலாம். ஆர்டர் பதிவு அமைப்பு என்பது மின்னணு இயந்திர அமைப்பு ஆகையினால் விநியோகிப்பாளர் அல்லது டிஜிகோல்டின் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட செயலிழப்புக்கு உட்பட்டிருக்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவே, விநியோகிப்பாளர் அல்லது டிஜிகோல்டு அனுப்புவதில் அல்லது தகவல் தொடர்பு வசதிகளில் (தளத்துடன் இணைக்க பயன்படுத்தப்படும் சாதனங்கள் எதுவும் உட்பட) ஏற்படும் சீர்குலைவு அல்லது செயலிழப்பு காரணத்தால், அல்லது விநியோகிப்பாளரின் அல்லது டிஜிகோல்டின் கட்டுப்பாடு அல்லது எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்ட மற்ற காரணங்களால் ஆர்டர்களைச் செயலாக்குவதில், அனுப்புவதில் ஏற்படும் பிழைகள், புறக்கணிப்பு இயலாமை, ஆர்டரை வழங்குவதில் அல்லது செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்திற்கு பொறுப்பேற்க மாட்டார்கள்.

20. கருத்தளிப்பு

20.1.தளம் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்த தளம் பயன்படுத்துவது குறித்து (“விமர்சனங்கள்”) உங்கள் விமர்சனம் மற்றும் அனுபவத்தைப் பதிவு செய்ய தளம் உங்களை அனுமதிக்கலாம்.

20.2.விமர்சனங்களை உருவாக்குபவராக நீங்கள், நீங்கள் பதிவேற்றும், பதிவு செய்யும் வெளியிடும், அனுப்பும் அல்லது மற்றப்படி தளத்தில் கிடைக்கும் படி செய்யும் விமர்சனங்களுக்கு பொறுப்பாவீர்கள். அத்தகைய விமர்சனங்கள் அனைத்தும் பொருந்தக்கூடிய சட்டத்தின் படி இருக்கும் என்று நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு தளத்தில் எந்த விமர்சனங்களுக்கும் சான்றளிக்கவில்லை மேலும் எந்த விமர்சனங்களுக்கும் பொறுப்பல்ல அல்லது உட்படவில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். விநியோகிப்பாளருக்கு தளத்தில் விமர்சனங்களுக்கான அணுகலை முடக்குவதற்கான உரிமை உள்ளது.

20.3.விநியோகிப்பாளருக்கு சொந்தமான அனைத்து மற்றும் எந்த வலைதளங்கள் மற்றும் தளங்கள் முழுவதும் மற்றும் ஆன்லைனில் ஒளிபரப்புதல், அச்சிடுதல் உட்பட ஆனால் இவைகள் மட்டுமே இல்லாமல் எந்த வடிவத்திலும் விநியோகிப்பாளர் சரியானது என்று கருதுகின்ற முறையில் விமர்சனங்களைப் பயன்படுத்த, நகலெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, வெளியிட, அனுப்ப, கிடைக்கும் படி செய்ய, படியெடுக்க, திருத்த, மாற்றியமைக்க நீங்கள் இதன்மூலம் விநியோகிப்பாளருக்கு நிரந்தரமான, திரும்பப் பெற முடியாத, உலகளாவிய, உரிமைத்தொகை இல்லாத மற்றும் துணை உரிமம் பெறக்கூடிய உரிமை மற்றும் உரிமத்தை வழங்குகிறீர்கள்.

20.4.நீங்கள் மேலும் தளத்தில் விமர்சனங்களைப் பதிவு செய்யும் போது நீங்கள் தாக்குதலான, அவதூறான, இழிவான, வெறுக்கத்தக்க அல்லது ஜாதி தொடர்பான அல்லது இனம் தொடர்பான ஆட்சேபிக்கத்தக்க மொழியைப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று பிரதிநிதித்துவப்படுத்தி உத்தரவாதமளிக்கிறீர்கள். மேலும், பெண்களை அநாகரிகமாக பிரதிநிதித்துவ (தடை) சட்டம், 1986-ல் வழங்கப்பட்டுள்ள படி பெண்களை அநாகரிகமாக பிரதிநிதித்துவப்படுத்தும் கீழ்மையான, ஆபாசமான உள்ளடக்கங்கள் எதையும் தளத்தின் எந்தப் பகுதியிலும் நீங்கள் பதிவு செய்யக் கூடாது.

21. இரகசியத்தன்மை

தனியுரிமை கொள்கைகளின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள படி, விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உட்பட, அனைத்து இரகசியமான தகவல்களையும் இரகசியமாக வைத்திருப்பார்கள், மற்றும் சட்டப்படி தேவைப்படுவதைத் தவிர வேறு யாருக்கும் வெளியிட மாட்டார்கள், மற்றும் அத்தகைய இரகசியமான தகவல்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதனுடைய சொந்த இரகசிய தகவல்களுக்கு அளிக்கப்படும் கவனிப்புடன் பாதுகாக்கப்படும். விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டு அதனுடைய பணியாளர்கள், இயக்குனர்கள், முகவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் இரகசியமான தகவல்கள் உத்தேசித்து வழங்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே அதைப் பயன்படுத்துவார்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டு அதனுடைய பணியாளர்கள், இயக்குனர்கள், முகவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் இரகசியத்தன்மையின் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள் போன்று அத்தகைய நபர்கள் இரகசியத்தன்மையின் இந்த விதமுறைகளின் விதிகளை ஏற்றுக்கொண்டு இணங்குவதை உறுதிப்படுத்த அனைத்து நியாயமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

22. உள்ளடக்கம் மற்றும் அறிவுசார்ந்த சொத்துக்களின் உரிமை

22.1.குறிப்பிட்ட பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள், சேவை அடையாளங்கள், லோகோக்கள், வர்த்தகப் பெயர்கள் மற்றும் தளத்தில் காட்சிப்படுத்தப்படும்/அணுகப்படும் மற்றும் டிஜிகோல்டு மூலம் வழங்கப்படும் சேவைகளுடன் தொடர்புடைய மற்ற அறிவுசார்ந்த தனியுரிமைகள் டிஜிகோல்டுக்கு முற்றிலும் பிரத்தியேகமாகவும் சொந்தமானது மற்றும் இந்திய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

22.2.கணிசமான அளவில் நேரம், முயற்சி மற்றும் பணம் செலவழிப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட தரநிலையான தீர்ப்புகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துவதன் வழியாக முறையே டிஜிகோல்டு மூலம் உருவாக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, திருத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட அசல் பணிகளை அமைக்கின்ற சேவைகள் டிஜிகோல்டு மற்றும் அத்தகைய மற்றவர்களின் மதிப்புமிக்க அறிவுசார்ந்த சொத்துக்களாக அமைகிறது என்பதை நீங்கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகளின் போது மற்றும் விதிமுறைகளின் காலம் முடிந்த பின்னர் டிஜிகோல்டின் தனியுரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். பதிப்புரிமை அறிவிப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளாமல் நீங்கள் தளத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது. நீங்கள் இந்த விதிமுறைகளில் உத்தேசிக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே தளத்திலிருந்து விஷயங்களைப் பதிவிறக்கலாம்.

22.3.மீறல்கள் எதுவும் நாட்டின் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் கிடைக்கக்கூடிய அனைத்து தீர்வுகளையும் பெற பொருத்தமான மன்றத்தில் உங்களுக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்கும்.

23. மூன்றாம் தரப்பினரின் வலைத்தளங்கள் / செயலிகளிலிருந்து, வலைத்தளங்கள் / செயலிகளுக்கு இணைப்புகள்

தளத்தில் மூன்றாம் தரப்பினர் உடன் தொடர்பு கொள்ளக்கூடிய இணைப்புகள் மற்றும் ஊடாடு செயல்பாடுகள் இருக்கலாம். விநியோகிப்பாளர் அல்லது டிஜிகோல்டு அத்தகைய வலைத்தளத்தின் செயல்பாடு, நடவடிக்கைகள், செயலின்மை, தனியுரிமை அமைப்புகள், தனியுரிமை கொள்கைகள், விதிமுறைகள், அல்லது உள்ளடக்கங்கள் எதற்கும் பொறுப்பல்ல மற்றும் பொறுப்பேற்க மாட்டார்கள். அத்தகைய எந்த வலைத்தளத்துடன் தொடர்பு கொள்ள பகிர்ந்து கொள்ளும் செயல்பாடுகளைச் செயல்படுத்த அல்லது மற்றப்படி அத்தகைய எந்த வலைத்தளத்தையும் பார்வையிடுவதற்கு முன், அத்தகைய ஒவ்வொரு மூன்றாம் தரப்பினரின் வலைத்தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், தனியுரிமை கொள்கைகள், அமைப்புகள், மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் செயல்பாடுகளை நீங்கள் ஆய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று டிஜிகோல்டு வலுவாக பரிந்துரைக்கிறது.

24. இழப்பீடு உத்தரவாதம்

விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு மற்றும்/அல்லது அதனுடைய பணியாளர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் அல்லது பிரதிநிதிகளுக்கு எந்த நேரத்திலும் (i) தளத்தின் பயன்பாடு மற்றும்/அல்லது தளத்தை அணுக வாடிக்கையாளரால் பயன்படுத்தப்படும் எந்த சாதனத்தாலும்; (ii) விநியோகிப்பாளர் மற்றும்/அல்லது டிஜிகோல்டு நல்ல நம்பிக்கையில் வாடிக்கையாளரின் அறிவுறுத்தல்களின் படி நடவடிக்கை எடுத்தல் அல்லது நடவடிக்கை எடுக்க மறுத்தல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், மற்றும் குறிப்பாக வாடிக்கையாளரின் புறக்கணிப்பு, தவறு அல்லது தவறான நடத்தை காரணமாக நேடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும்; (iii) விதிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் கணக்கு தொடர்பான மீறல் அல்லது இணக்கமின்மை; மற்றும்/அல்லது (iv)வாடிக்கையாளரின் எந்தவொரு பரிவர்த்தனை தொடர்பான மோசடி அல்லது நேர்மையின்மை காரணத்தால் ஏற்படக்கூடிய, மேற்கொள்ளக்கூடிய, பாதிக்கக்கூடிய அல்லது விளைவு ஏற்படுத்தக்கூடிய அனைத்து செயல்பாடுகள், கோரிக்கைகள், தேவைகள், நடவடிக்கைகள், இழப்புகள், சேதங்கள், செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவினங்களுக்கு எதிராக, நேரடியாகவோ மறைமுகமாகவோ எதுவாகிலும் (“இழப்புகள்”) விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டுக்கு இழப்பீடு உத்தரவாதமளிக்க நீங்கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள்.

25. உத்தரவாதங்களின் மறுப்பு

25.1.சேர்க்கப்பட்டுள்ள அல்லது மற்றப்படி தளத்தின் வழியாக கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து தகவல்கள், உள்ளடக்கங்கள், விஷயங்கள் மற்றும் சேவைகள் அல்லது மற்றப்படி தளத்தின் வழியாக கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள (கூட்டாக, “உள்ளடக்கங்கள்”) எந்த விதமான பிரதிநிதித்துவங்களும் உத்தரவாதங்களும் இல்லாமல் “கிடைக்கக்கூடிய அடிப்படையில்”, “அப்படியே” டிஜிகோல்டு மற்றும் விநியோகிப்பாளர் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகிப்பாளர் தளத்தின் செயல்பாடு, உள்ளடக்கங்களின் துல்லியம் அல்லது முழுமை மற்றும் தகவல்களின் துல்லியம் குறித்து வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் எந்த விதமான பிரதிநிதித்துவமும் உத்தரவாதமும் அளிக்கவில்லை. ஏதாவது உள்ளடக்கம், விஷயங்கள், ஆவணங்கள் அல்லது தகவல்களைப் பதிவிறக்கம் செய்வதால் உங்கள் கணினிக்கு ஏற்படும் எந்த சேதத்திற்கும் அல்லது தகவல்களின் இழப்பிற்கும் அல்லது தளத்தைப் பயன்படுத்துவதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய வேறு எந்த இழப்புகளுக்கும் டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகிப்பாளர் பொறுப்பேற்க மாட்டார்கள். தளத்தை முற்றிலும் உங்களுடைய ஆபத்தில் பயன்படுத்த நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள். எழுத்துப்பூர்வமாக குறிப்பிடாத வரையில் நேரடியாக, மறைமுகமாக, விளைவான, தண்டனையாக விதிக்கப்படுகிற, மற்றும் விளைவான சேதங்கள் உட்பட இவைகள் மட்டுமே இல்லாமல் தளம் அல்லது சேவைகள் அல்லது உள்ளடக்கங்களைப் பயன்படுத்துவதிலிருந்து ஏற்படக்கூடிய எந்த வகையான சேதத்திற்கும் டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகிப்பாளர் பொறுப்பேற்க மாட்டார்கள். சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழு அளவிற்கு, உரிமை, விற்பனைக்குரிய மற்றும் குறிப்பிட்ட நோக்கம் அல்லது பயன்பாட்டின் உறுதி குறித்த உத்தரவாதங்கள் உட்பட இவைகள் மட்டுமே இல்லாமல் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தளம் (அல்லது அதனுடைய பகுதி ஏதேனும்) மற்றும் அதனுடைய உள்ளடக்கங்கள் குறித்து எந்த மற்றும் அனைத்து பிரதிநிதித்துவங்களையும் உத்தரவாதங்களையும் டிஜிகோல்டு மற்றும்/ அல்லது விநியோகிப்பாளர் மறுக்கிறார்.

26. பொறுப்பிற்கான வரையறை

உங்களுக்கு ஏற்படும் எந்தவொரு சிறப்பான, விளைவான, தற்செயலான மற்றும் உதாரணமான அல்லது தண்டனைக்குரிய சேதங்கள், அல்லது இலாபம் அல்லது வருமானத்தின் இழப்பிற்காக டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகிப்பாளர் (அதனுடைய இயக்குனர்கள், பணியாளர்கள், முகவர்கள் அல்லது கூட்டாளர்கள் உட்பட ஆனால் இவர்கள் மட்டுமே இல்லாமல்) பொறுப்பேற்க மாட்டார்கள் என்பதை நீங்கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். வாடிக்கையாளர் கணக்கு தகவல்களைப் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைக்க நீங்கள் தவறுதல் மற்றும்/அல்லது சேவைகளிலிருந்து உங்கள் தகவல்கள் அல்லது உள்ளடக்கங்கள் தொடர்பான எந்த இழப்பிற்கும், உங்கள் தகவல்களின் எந்த இழப்பிற்கும், ஏதாவது மூன்றாம் தரப்பினர் மூலம் தளத்திற்கு அல்லது தளத்தின் வழியாக அனுப்பப்படக்கூடிய ஏதாவது பிழைகள், வைரஸ்கள், ட்ரோஜன் ஹார்ஸ்கள், அல்லது இது போன்றவைகளால் ஏதாவது சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள தளத்தை உங்களால் அணுக முடியாமல் இருப்பதால், அல்லது அணுகுவதில் உங்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு எந்த விதத்திலும் ஏற்படும் சேதங்களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் டிஜிகோல்டு மற்றும்/அல்லது விநியோகிப்பாளர் பொறுப்பேற்க மாட்டார்கள். தங்கம் வாங்குவதற்காக உங்களிடமிருந்து ஏதாவது கட்டணங்களை ஏற்றுக்கொள்ள/வசூலிக்கும் நோக்கத்திற்காக விநியோகிப்பாளர் மூலம் நியமிக்கப்பட்ட/பரிந்துரைக்கப்பட்ட ஏதாவது நபரால் மற்றும்/அல்லது தளத்தை அணுக உங்களால் பயன்படுத்தப்படும் சாதனத்திற்குரிய எந்த நபரும் உட்பட (ஆனால் இவைகள் மட்டுமே இல்லாமல்) விநியோகிப்பாளர், ஏதாவது இடைத்தரகர்கள் அல்லது வேறு ஏதாவது மூன்றாம் தரப்பினர்களின் எந்த மற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் செயலின்மைகளுக்கும் எதுவாகிலும் எந்த விதத்திலும் டிஜிகோல்டு பொறுப்பேற்காது என்று நீங்கள் மேலும் ஒப்புக்கொள்கிறீர்கள். இதே போன்று, டிஜிகோல்டு அல்லது மற்ற இடைத்தரகர்களின் எந்த மற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதுவாகிலும் எந்த விதத்திலும் விநியோகிப்பாளர் பொறுப்பேற்க மாட்டார்.

27. குறைகளுக்கு தீர்வு காணும் வழிமுறை

27.1.தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் படி:

27.1.1.விநியோகிப்பாளர் நோக்கங்களுக்காக குறைகளுக்கு தீர்வு காணும் அதிகாரியின் தொடர்பு விவரங்கள்:
பெயர்: தன்வி அரோரா
மின்னஞ்சல் ஐடி: terms@balancehero.com

27.1.2.டிஜிகோல்டு நோக்கங்களுக்காக குறைகளுக்கு தீர்வு காணும் அதிகாரியின் தொடர்பு விவரங்கள்:
பெயர்: ருக்ஷர் கான்
மின்னஞ்சல் ஐடி: care@safegold.in
முகவரி: 1902B பெனின்சுலா பிசினஸ் பார்க், ஜி.கே. மார்க், லோயர் பரேல், மும்பை 400013

28. விதிமுறைகளின் திருத்தங்கள், ஏற்றுக்கொள்தல்

28.1.டிஜிகோல்டுக்கு எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகளின் பகுதிகளை மாற்ற, திருத்த, சேர்க்க அல்லது நீக்க உரிமை உள்ளது. அத்தகைய மாற்றங்கள் தளத்தில் பதிவு செய்யப்படும் மற்றும் அத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன் வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். முரண்பாடாக ஏதாவது இருந்தாலும், தளத்தில் பதிவு செய்யப்படக்கூடிய விதிமுறைகள் அதனுடைய திருத்தங்களையும் வழக்கமாக ஆய்வு செய்ய வாடிக்கையாளர் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் திருத்தப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாக கருதப்படும்.

28.2.தளத்தை அணுகுதல், உலாவுதல் அல்லது மற்றப்படி பயன்படுத்துதல் இந்த விதிமுறைகளின் கீழ் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் ஒப்புக்கொண்டுவிட்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. தொடர்வதற்கு முன் இந்த விதிமுறைகளைக் கவனமாக படிக்கும் படி உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த விதிமுறைகளை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ஏற்றுக்கொள்வதன் மூலம், அவ்வப்போது திருத்தப்படும் விநியோகிப்பாளர் மற்றும் டிஜிகோல்டின் (“தனியுரிமை கொள்கை”) தனியுரிமை கொள்கைகள் உட்பட ஆனால் இவைகள் மட்டுமே இல்லாமல் அனைத்து கொள்கைகளுக்கும் கட்டுப்படுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் விநியோகிப்பாளரின் தனியுரிமை கொள்கைகளைத் தளத்திலும் டிஜிகோல்டின் தனியுரிமை கொள்கைகளை www.safegold.com-யிலும் பார்த்து படிக்கலாம்.

28.3.நீங்கள் விதிமுறைகளை ஏற்கவில்லை அல்லது விதிமுறைகளுக்கு கட்டுப்பட முடியவில்லை என்றால் நீங்கள் தளத்தைப் பயன்படுத்த அல்லது சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். தளத்திற்கான உங்கள் அணுகல் மற்றும் பயன்பாடு அல்லது தளத்தைப் பயன்படுத்த உங்களுக்கு எந்த சேவைகளையும் வழங்குவதற்கு நிபந்தனையாக, தளத்தைப் பயன்படுத்தும் போது அனைத்து பொருத்தமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் இணங்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களால் பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர் கணக்கு ஏதாவது சட்டவிரோதமான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்று டிஜிகோல்டு கருதினால், டிஜிகோல்டுக்கு தளத்தின் வழியாக சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து உங்களைத் தடுப்பது அல்லது தவறிழைத்தோர் பட்டியலில் சேர்ப்பது அல்லது அத்தகைய சட்டவிரோதமான செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரிவிப்பது உட்பட, அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உள்ளது.

bottom of page