Terms & Conditions
ரீசார்ஜ் கடனுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
இந்த ஆவணம் கீழ்கண்ட இந்திய சட்டங்களுக்கு இணங்கி கட்டுப்படுத்தப்பட்டது (i) இந்திய ஒப்பந்த சட்டம், 1872; (ii) தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000, தகவல் தொழில்நுட்ப (நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள்) விதிமுறைகள், 2011 இன் விதிகள், கட்டுப்பாடுகள், வழிகாட்டல்கள் மற்றும் தெளிவுரைகள், மற்றும் தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர்கள் வழிகாட்டுதல்கள்) விதிகள், 2011 இன் விதி 3 (1) இன் கோட்பாடுகள்; (iii) கொடுப்பனவு மற்றும் தீர்வு முறைகள் சட்டம், 2007, மற்றும் அதன் விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்; மற்றும் (iv) இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 மற்றும் அதன் விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.
இந்த ஆவணம் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் கீழ் மின்னணு ஒப்பந்தமாக இயற்றப்பட்ட மின்னணு அறிக்கை மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 கீழ் ஏற்படும் மாற்றங்களுக்கு உட்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு எந்த வித கையெழுத்தும் தேவை இல்லை.
இந்த ஒப்பந்தம் உங்களையும் பேலன்ஸ்ஹீரோ இந்தியா பிரைவேட் லிமிடெட்டையும் (இரண்டு விதிமுறைகளும் கீழே உள்ளன) சட்டபூர்வமாக இணைக்கும் ஆவணம் ஆகும். நீங்கள் இதை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் (மின்னணு படிவம் அல்லது மின்னணு அறிக்கை அல்லது எந்த முறையிலும்) இந்த ஆவணத்தின் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் மேலும் ட்ரு பேலன்ஸ் சேவைகளை உபயோகிக்கும் பொழுது உங்களுக்கும் ட்ரு பேலன்ஸிற்கும் இடையே இருக்கும் உறவையும் இது கட்டுப்படுத்துகிறது.
1. இந்த விதிமுறைகளுக்கேற்ப தேவைப்படும் இடத்தில்-
a. "நீங்கள்/உங்கள்", "நுகர்வோர்" அல்லது "பயனர்" என்பவை அனைத்தும் ட்ரு பேலன்ஸில் பதிவு செய்து அதன் விதிமுறைகளை ஒப்புக்கொண்ட நபர் அல்லது சட்ட பிரதிநிதியை குறிக்கும்.
b. “நாங்கள்”, “நமது”, “எங்கள்”, “ட்ரு பேலன்ஸ்” என்பவை அனைத்தும் பேலன்ஸ்ஹீரோ இந்தியா பிரைவேட் லிமிடெட்டைக் குறிக்கும்.
c. “ஹாப்பி லோன்ஸ்” என்பது அர்த்இம்பாக்ட் பின்செர்வ் தனியார் நிறுவனத்தைக் குறிக்கிறது.
2. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (“விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்”) மற்றும் ஹாப்பி லோன்ஸ் வழங்கும் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் ஒரு வாடிக்கையாளராக நீங்கள் ட்ருபேலன்ஸ் செயலி மூலம் ஹாப்பி லோன்ஸிடம் பெற்ற ரீசார்ஜ் கடனிற்கான உரிமைகள் மற்றும் கடமைகளைக் கட்டுப்படுத்துகிறது. ட்ரு பேலன்ஸ் செயலி மூலம் நீங்கள் வாங்கிய இன்ஸ்டன்ட் கேஷ் கடன் ஹாப்பி லோன்ஸ் நிறுவனம் தருகிறது என்பதை நீங்கள் அறிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
3. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அனைத்து நேரங்களிலும் தொடர்ந்து நீங்கள் ஒப்புக்கொண்டால் தான் நீங்கள் ட்ரு பேலன்ஸ் கைப்பேசி செயலி மற்றும் ட்ரு பேலன்ஸ் சேவைகளை பயன்படுத்த முடியும்.
4. இந்திய ஒப்பந்த சட்டம் 1872 படி சட்டப்படி ஒப்பந்தத்தில் இணைய தகுதி பெறுபவர்கள் மட்டும் தான் ட்ரு பேலன்ஸ் கைப்பேசி செயலியை உபயோகிக்க முடியும். 18 வயதிற்குட்பட்டவர்கள், திவாலானவர்கள் உட்பட இந்திய ஒப்பந்த சட்டம் 1872 கீழ் ஒப்பந்தத்தில் ஈடுபட தகுதி பெறாதவர்கள் என கருதப்படுபவர்கள் ட்ரு பேலன்ஸ் கைப்பேசி செயலியை உபயோகிக்க முடியாது.
5. ரீசார்ஜ் கடன் பெரும் போதும், மற்ற நேரங்களிலும் மற்றும் பதிவு செய்யும் பொழுது ட்ருபேலன்ஸில் நீங்கள் தந்த (“தனிப்பட்ட தகவல்களான”) பெயர், முகவரி, தொடர்பு எண் போன்றவை அனைத்தும் உண்மையானது, துல்லியமானது, சரியானது மற்றும் முழுமையானது என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். தனிப்பட்ட தகவல்களை அவ்வப்போது மேம்படுத்தி உங்கள் தகவல்களை உண்மையாக, துல்லியமாக மற்றும் முழுமையாக பராமரிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.
6. ட்ரு பேலன்ஸ் செயலி வழியாக ரீசார்ஜ் கடன் பெரும் போது தங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹாப்பி லோன்ஸ் நிறுவனத்திற்கு பகிரப்படும் என்பதை வாடிக்கையாளர் இங்கே அறிந்து ஒப்புக்கொள்கிறார்.
7. ட்ரு பேலன்ஸ் செயலி மூலம் பெறப்படும் ரீசார்ஜ் கடன் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே.
8. பரிவர்த்தனை நடந்த 24 மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கடன் ஆவணங்கள் ஹாப்பி லோன்ஸால் அனுப்பிவைக்கப்படும்.
9. ஹாப்பி லோன்ஸ் தரும் ரீசார்ஜ் கடனிற்கான அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் பொருந்தும்.
10. ஹாப்பி லோன்ஸ் தரும் கட்டண அட்டவணைக்கேற்ப உங்கள் ட்ரு பேலன்ஸ் கணக்கில் இருந்து ரீசார்ஜ் கடனிற்கான தவணை எடுக்கப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
11. எஸ்எம்எஸ், செயலி அறிவிப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் அழைப்புகள் மூலம் கட்டண நினைவூட்டல்கள் பெற நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
12. பணம் திருப்பி கட்டுவதில் தாமதம் இருந்தால் உங்கள் ட்ரு பேலன்ஸ் கணக்கு முடக்கப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்
13. பணம் திருப்பி கட்டாவிட்டால் உங்கள் ட்ரு பேலன்ஸ் கணக்குடன் இணைந்த கேஷ்பாக் முடக்கப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
14. ரீசார்ஜ் கடன் பெற, சுயபடம் / பான் மற்றும் ட்ரைவிங் லைசென்ஸ் / வோட்டர் ஐடி ஆகியவற்றைப் பதிவேற்றுதல் அவசியம்.
ஹாப்பி லோன்ஸ் வழங்கும் ரீசார்ஜ் கடனிற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஹாப்பி லோன்ஸ் மற்றும் நுகர்வோருக்கு இடையே போடப்படும் ஒப்பந்தம் ஆகும். ரீசார்ஜ் கடனில் ஏதேனும் பிரச்சனை என்றால், ஹாப்பி லோன்ஸ் அல்லது ட்ரு பேலன்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.